நாயகன் மீண்டும் வர்றான்… மிக முக்கியமான போட்டியில் எண்ட்ரீ கொடுக்கும் ரிஷப் பண்ட்… புதிய தகவல் வெளியாகியுள்ளது !!

நாயகன் மீண்டும் வர்றான்… மிக முக்கியமான போட்டியில் எண்ட்ரீ கொடுக்கும் ரிஷப் பண்ட்… புதிய தகவல் வெளியாகியுள்ளது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் தயாராகி விடுவார் என்ற தகவல் பிசிசிஐ நிர்வாகி ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகிய இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், உயிர் சேதத்திலிருந்து தப்பித்தாலும் உடல் முழுவதும் கடுமையான காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

ஆழமான வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் என அனைத்தும் சில வாரங்களில் குணமடைந்தாலும் அவருக்கு முட்டியில் கிழிந்திருக்கும் ஜவ்வு பிரச்சனை சரியாவதற்கு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், பார்டர் கவாஸ்கர் டிராபி, 2023 ஐபிஎல் தொடர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்,மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் என எதிலும் பங்கு பெற மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணமாகி வரும் ரிஷப் பண்ட்..

ரிஷப் பண்டிற்கு ஏற்பட்டிருக்கும் காயம் கிட்டத்தட்ட ஜடேஜாவிற்கு காலில் ஏற்பட்டிருக்கும் காயம் போன்று உள்ளது என மற்றொரு தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிஷப் பண்ட் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்குள் தயாராகி விடுவார் என்ற தகவல் பிசிசிஐ நிர்வாகி ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெறவுள்ளதால், அதற்கு முன் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் ரிஷப் பண்டிற்கு பதிலாக இந்தியா அணி மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேர்ந்தெடுப்பதற்கு யோசித்து வருகிறது.

ரிஷப் பண்டிர்க்கு இருக்கும் ஒரே சிக்கல்..

ரிஷப் பண்ட் மீண்டு வந்து இந்திய அணியில் விளையாடுவது மகிழ்ச்சி என்றாலும், பிசிசிஐ புதிதாக அறிமுகம் செய்யவிருக்கும் யோயோ மற்றும் டெக்ஸா உடற்தகுதி தேர்வில் தேர்வாவாரா என்பது சந்தேகம் பெரும்பாலானவர்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.