சரியாக இந்த 4 சீனியர் வீரர்களிடம் மட்டுமே ஆலோசனை பெறுவேன்! வீரர்களின் பெயர்களை வெளிப்படையாக கூறிய ரிஷப் பன்ட்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் முறையாக ரிஷப் பண்ட் களமிறங்கி விளையாடினார். முதல் டெஸ்ட் தொடரில் மிகப்பெரிய நம்பிக்கையை இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி அதற்கு பின்னர் அடுத்தடுத்த வாய்ப்புகளை தக்கவைத்துக் கொண்டார்.

இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் சிட்னி மற்றும் காபாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் மிக அற்புதமாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணமாக ரிஷப் பண்ட் விளங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காண்பிக்க தவறவில்லை.

இதுவரை ரிஷப் பண்ட் இருபத்தி ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1403 ரன்கள் குவித்துள்ளார். அதில் மூன்று சங்கங்களும் 6 அரை சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இவருடைய பேட்டிங் அவரேஜ் 43.84 ஆகும்
தன்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பின்னால் இருக்கும் விஷயத்தை தற்பொழுது ரிஷப் பண்ட் வெளிப்படையாக கூறியுள்ளார்.

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் கிடைக்கும் அறிவுரை

ஒரு போட்டி நடந்து முடிந்தவுடன் அந்த போட்டியில் என்ன மாதிரியான விஷயத்தை நான் செய்து இருந்திருக்கலாம் என்றும் அந்த போட்டியில் தான் செய்த தவறு என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கும் ரோஹித் சர்மாவிடம் நிறைய நேரம் பேசுவேன். அவருடைய அனுபவம் எனக்கு அடுத்தடுத்த போட்டிகளில் உதவும்.

அதேபோல டெக்னிக்கல் விஷயத்தில் விராட் கோலி என்னை வழிநடத்துவார். குறிப்பாக இங்கிலாந்து போன்ற மைதானங்களில் எப்படி விளையாட வேண்டும் என்கிற யுக்தியை விராட் கோலி எனக்கு கற்றுக் கொடுப்பார். இவ்வாறு இவ்விரு வீரர்கள் தன்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த அறிவுரை கூறி வருவதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார்

ரவி சாஸ்திரி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என அனைத்து வீரர்களிடமும் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உலக நாடுகள் அனைத்திலும் விளையாடி இருக்கிறார். அவரது கிரிக்கெட்டில் நிறைய அனுபவம் இருக்கிறது. எனவே கிடைக்கும் நேரங்களில் அவரிடமும் நான் நிறைய கற்றுக் கொள்வேன். ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் விளையாடும் வேளையில் எந்த நேரத்தில் பந்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், பூட் வொர்க் குறித்த சந்தேகங்களை அவரிடம் நான் கேட்டு கற்றுக் கொள்வேன் என்றும் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

மேலும் பேசிய ரிஷப் பண்ட் நான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரிடம் பேசுவேன். ஒவ்வொருவரின் அனுபவம் மற்றும் ஆலோசனைகள் எனக்கு என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த உதவும். எனவே அனைத்து கிரிக்கெட் வீரர்கள் இடமும் நான் என்னுடைய ஆட்டம் குறித்து நிறைய பேசுவேன் என்றும் இறுதியாக ரிஷப் பண்ட் கூறி முடித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.