“இவர் அணியில் இருந்தால்தான் என்னால் சரியாக ஆடமுடியும்” – ரிஷப் பண்ட் ஓபன் டாக்!

“இவர் இல்லாமல் போனதால் என்னால் சரியாக ஆடமுடியவில்லை” – ரிஷப் பண்ட் ஓபன் டாக்!

இந்திய அணியில் இவரை தான் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர் இல்லாமல் போனது எனக்கு மிகவும் வருத்தத்தை தந்தது என மனம்திறந்து பேசியுள்ளார் இளம் வீரர் ரிஷப் பண்ட்.

அண்டர்-19 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர் என இரண்டிலும் தனது அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தி அதிரடி மூலம் அனைவரையும் எதிர்த்தவர் இளம் வீரர் ரிஷப் பண்ட். இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.

அதன் பிறகு இவர்மீது எதிர்பார்ப்பும் அதிகமானது. குறிப்பாக ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை அரையிறுதிக்கு பிறகு தோனி இந்திய அணியில் இடம் பெறாததால் அவருக்கு பதிலாக பண்ட் கீப்பிங் பொறுப்பை ஏற்று செயல்பட்டார். இவர் மீது மிகப்பெரிய பாரம் ஏற்பட்டது போல பலரும் கருதினர்.

இந்த பாரத்தின் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை; ரிஷப் பண்ட் அதன் பிறகு மிகவும் சொதப்பலான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். இதனால் இவர் மீது விமர்சனங்களும் இமயமலை அளவிற்கு குவிந்தன. இருப்பினும் இந்திய அணியின் தேர்வுக்குழு இந்த இளம் வீரரின் திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டு வரும் வரை விடப்போவதில்லை என தொடர்ந்து வாய்ப்புகளை அளித்து வந்து கொண்டே இருந்தது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக இவர் வெளியில் அமர்த்தப்பட்டார். இதனால் கீப்பிங் செய்ய குறைந்தபட்ச அனுபவம் கொண்ட கேஎல் ராகுல் உள்ளே எடுத்து வரப்பட்டார். இவர் தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதனால் ரிஷப் பண்ட் கேப்பிங் பொறுப்பு கேள்விக்குறியாக அமைந்தது. இருப்பினும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “ரிஷப் பண்ட் திறமையை நாங்கள் அறிவோம். அவரது முழு திறமையை வெளி வரும் வரை தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படும்” என சூசகமாக தெரிவித்தார்.

இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளும் குறிப்பாக ஐபிஎல் தொடரும் தடைபட்டிருக்கிறது. ஆதலால் வீரர்கள் வீடியோ மூலம் தங்களது ரசிகர்களிடம் தொடர்ந்து வினாவி வருகின்றனர்.

அதேபோல ஒரு நிகழ்ச்சியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிஷப் பண்ட்டை பேச வைத்தது. அதில் ரசிகர்கள் பலர் கேள்விகள் எழுப்பினர்.

குறிப்பாக, இந்திய அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார்? யாருடன் விளையாட விரும்புவீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரிஷப் பண்ட், “நான் மூத்த வீரர் தோனியுடன் களத்தில் ஆட குறைந்த வாய்ப்புகளே கிடைத்தபோதும் அவருடன் ஆடுவதையே மிகவும் பிடித்த ஒன்றாக கருதுகிறேன். அவருடன் ஆடுகையில் எதைப்பற்றியும் சிந்திக்க தேவையில்லை. அவர் சொல்லும் செயலை செய்தாலே போதுமானது. அந்த அளவிற்கு அவரது கணிப்புகள் மிகச் சரியானதாக இருக்கும்.” என பதிலளித்தார்

Prabhu Soundar:

This website uses cookies.