இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே இந்திய அணியின் வீரரான ரிஷப் பண்ட் மிக சிறப்பாக செயல்படுகிறார் அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
சமீபமாக நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ரிஷப் பண்ட் என்றும் சொல்லும் அளவிற்கு இவர் மிக சிறப்பாக செயல்பட்டார்.முதலில் விருத்திமான் சஹா இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் சரியாக செயல்படாததால் அவருக்கு பதில் ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக களம் இறங்கினார் இவர் தனக்கு கொடுத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதற்கு ரிஷப் பண்ட் ஒரு முக்கிய காரணம் சிட்னியில் நடந்த ஐந்தாவது நாள் போட்டியில் ரிஷப் பண்ட் 119 பந்துகளுக்கு 97 ரன்கள் அடித்து அசத்தினார். இவரின் இந்த செயல்பாட்டால் ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்கள் சிதறினர்.
மேலும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக அதிகமான ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இதுபற்றி இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே கூறியதாவது.
ரிஷப் பண்டை பற்றி நாம் அதிகம் யோசிக்க வேண்டாம், நாம் அவரிடம் சென்று எதுவும் அதிகம் கூற வேண்டாம், அவரைஅவரது போக்கிலேயே விளையாடவிட வேண்டும், நாம் யாரும் சென்று அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். ஏனென்றால் அவர் மிக சிறப்பாக தான் செயல்படுகிறார் அவரை தனியாக விட்டு விடுங்கள் என்று ரஹானே தெரிவித்தார்.