கற்றுக்கொள்கிறேன்: அணியில் இருந்து நீக்கப்பட்ட ரிஷப் பன்ட் ட்வீட்!!

LONDON, ENGLAND - SEPTEMBER 6 : Rishabh Pant of India during a training session before the fifth Specsavers Test Match between England and India at The Kia Oval on September 6, 2018 in London, England. (Photo by Philip Brown/Getty Images)

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கிரிக்கெட்டையும் ஆடாமல் மேட்ச் பிராக்டீஸ் இல்லாத தோனி அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. அதன்பின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெறாத எம்எஸ் டோனி, இந்த தொடரில் இடம்பிடித்துள்ளார். இதனால் டோனியின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்தது என்ற யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது தேர்வுக்குழு.

India’s Shikhar Dhawan, left, and Rishabh Pant run between the wickets during the third and last Twenty20 international cricket match between India and West Indies in Chennai, India, Sunday, Nov. 11, 2018. (AP Photo/Aijaz Rahi)

தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட ரிஷப் பந்த் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடுவதற்காக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டி20 அணியிலிருந்து நீக்கப்பட்ட தோனி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார், 2019 உலகக்கோப்பையை தோனியை வைத்துதான் திட்டமிடுகின்றனர் போலும் இந்திய அணி நிர்வாகம், ஆகவே அவரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் எந்த ஒரு கேள்வியுமின்றி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் அணியில் மீண்டும் மொகமத் ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜனவரி 7ம் தேதி நிறைவடைகிறது. பிறகு 5 நாட்கள் சென்று சிட்னி, அடிலெய்ட், மெல்போர்னில் 3 ஒருநாள் போட்டிகளுடன் ஆஸ்திரேலியா தொடர் முடிவுக்கு வருகிறது.

நியூஸிலாந்து தொடர் ஜனவரி 23ம் தேதியில் தொடங்குகிறது. இங்கு 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

 

இந்திய ஒருநாள் போட்டி அணி:

விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவண், ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமெட், ஷமி.

அணிக்குள் வந்தவர்கள்: தினேஷ் கார்த்திக், மொகமது ஷமி, ஹர்திக் பாண்டியா.

நீக்கப்பட்டவர்கள்: மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், உமேஷ் யாதவ்.

இந்திய டி20 அணி:

விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவண், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமெட்.

உள்ளே: தோனி, ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ்.

வெளியே: மணீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ்

Sathish Kumar:

This website uses cookies.