தோனி … தோனி … என கத்திய ரசிகர்களுக்கு ரிஷப் பன்ட் கொடுத்த பதிலடி!

தோனியின் பெயர் உச்சரிக்கப்பட்டாலும் எனக்கு ஆதரவளித்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தெரிவித்துள்ளார்.

 

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 6 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் விராட் கோலியும் 4 ரன்னில் ஏமாற்றினார். சற்று நேரம் நிலைத்து நின்ற ரோகித் சர்மா 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 80 ரன்னிற்கு மூன்று முக்கிய விக்கெட்களை இந்திய அணி இழந்தது.

MANCHESTER, ENGLAND – JULY 10: Rishabh Pant of India bats during resumption of the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between India and New Zealand after weather affected play at Old Trafford on July 10, 2019 in Manchester, England. (Photo by Nathan Stirk/Getty Images)

 

பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் உடன் ரிஷப் பன்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, பின்னர் அடித்து விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. இருப்பினும், ஸ்ரேயாஸ் ஐயர் 70, ரிஷப் பன்ட் 71 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 47.5 ஓவரில் 291 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டி வெற்றிப் பெற்றது.

போட்டி முடிந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரிஷப் பன்ட் “ஒரு வீரருக்கு ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஆதரவு இருக்க வேண்டியது அவசியம். சென்னை ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுத்தனர். நான் என் ஆட்டத் திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன். தினமும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். சர்வதேச போட்டிகளில் அணியின் நலனுக்காக விளையாட வேண்டும். அதைதான் நேற்று நான் செய்தேன். இறுதியில் எனக்கு ரன்னும் நம்பிக்கையும் கிடைத்தது. தோனியின் பெயர் உச்சரிக்கப்பட்டாலும் எனக்கு ஆதரவளித்த சென்னை ரசிகர்களுக்கு நன்றிள” என்றார் அவர்

Sathish Kumar:

This website uses cookies.