இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; சர்ச்சையை கிளப்பும் முன்னாள் வீரர் !!

இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; சர்ச்சையை கிளப்பும் முன்னாள் வீரர்

இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்டின் அதிரடி ஆட்டம் தனக்கு முன்னாள் வீரர் சேவாக்கை நினைவுபடுத்துவதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் அதிரடி பேட்ஸ்மேனுமான சேவாக், பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் டெஸ்ட் போட்டியில் இரண்டு முச்சதமும் அடித்தவர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடி, எதிரணிகளின் நம்பிக்கையை சிதைத்து போட்டி முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆட உதவுவார். முதல் 10 ஓவர்கள் சேவாக் ஆடினால் போதும்; அந்த ஆட்டத்தை அதன்பின்னர் இந்திய அணியிடமிருந்து எதிரணிகளால் பறிக்க இயலாது. அந்தளவிற்கு அதிரடி வீரர்.

அப்படிப்பட்ட அதிரடி வீரர் சேவாக்கே, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தை பார்த்து வியந்துபோய், அவரை கேம் சேஞ்சர் என பாராட்டியிருந்தார். இந்நிலையில், ரிஷப் பண்ட்டை இந்தக்கால கிரிக்கெட்டின் சேவாக் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் புகழ்ந்துள்ளார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 21 பந்துகளில் 49 ரன்களை குவித்து டெல்லி அணி வெற்றி பெற உதவினார். கடைசிநேர அவரது அதிரடி பேட்டிங்கால்தான் இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு டெல்லி அணி தகுதிபெற்றது.

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், ரிஷப் பண்ட் இந்த தலைமுறையின் சேவாக் என்று பாராட்டியுள்ளார். ரிஷப் பண்ட்டும் ஒருசில ஓவர்களில் ஆட்டத்தை தலைகீழாக மாற்றிவிடுகிறார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட, தம்பியின் 18வது ஓவரில் 22 ரன்களை குவித்து வெற்றியை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.