மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரில் மகேந்திர சிங் தோனியின் சாதனையை, இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முறியடிக்க வாய்ப்பு.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி 20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நாளை (வெள்ளிக்கிழமை) விளையாட உள்ளது. இந்த போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கவும், புதிய சாதனைகளை படிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. விராட் கோலி பொறுத்தவரை அதிக ரன்கள் எடுத்து ரோஹித் சர்மாவை முந்திக் கொள்ள விரும்புகிறார். அதேநேரத்தில் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்கள் என்ற சாதனை முடிக்க முயற்சிப்பார். இந்த இருவரை தவிர ரிஷப் பந்தின் இலக்கு எம்.எஸ் தோனி (MS Dhoni) சாதனை முறியடிப்பதாக இருக்கும். கடைசி மூன்று தொடர்களைப் போல, இந்த முறையும் இந்திய அணியில் தோனி இல்லை.
இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் முறியடிக்க முடியும். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி 20 போட்டிகளில் தோனி மிகவும் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் ஆவார். அவர் ஏழு போட்டிகளில் இந்த அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டை (கேட்ச் அல்லது ஸ்டம்பிங்) பறித்துள்ளார். தோனியின் ஐந்து விக்கெட்டில் மூன்று கேட்சுகள் மற்றும் இரண்டு ஸ்டம்பிங்ஸ் அடங்கும்.
ரிஷாப் பந்த் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளார். அந்த அணிக்கு எதிராக ஒரு விக்கெட் கீப்பராக மூன்று கேட்சுகளை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோனியின் சாதனையை முறியடிக்க அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் கேட்ச் அல்லது ஸ்டம்பிங் மூலம் மூன்று பேரை அவுட் செய்தால், அவர் தோனியை முந்திக்கொள்வார்.
மேற்கிந்தியத் தீவுகளைப் பற்றிப் பேசும்போது, இந்தியாவுக்கு எதிரான அவரது மிக வெற்றிகரமான விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் ஆவார். அவர் தோனியைப் போலவே, ஏழு போட்டிகளில் ஐந்து பேரை வேட்டையாடி உள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் (இரண்டாவது) மூன்று பேரை திருப்பி அனுப்பிய ஆண்ட்ரே பிளெட்சர் உள்ளார்.