யார் சொன்னது எனக்கு மூனு சான்சுன்னு – ட்விட்டரில் பாய்ந்த ரோகித் சர்மா

பெங்களூருவில் இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்களுக்கு உடற்தகுதி பரிசோதனை நடக்கிறது. இதில் கலந்துகொண்ட ரோஹித் சர்மா. பிசிசிஐ நிர்ணயித்த இலக்கை கடந்து தேர்ச்சி பெற்றார். இதனால், இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் நிச்சயம் இடம்பெறுகிறார். முதல் வாய்ப்பிலேயே தேர்ச்சி பெற்றதால், ட்விட்டரில் கலாய்த்து கிண்டல் செய்த ரசிகர்கள் மீது பாய்ந்துள்ளார்.

முதலில் இங்கிலாந்து அயர்லாந்து செல்லும் வீரர்களுக்கு யோ-யோ பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டு பின்பு ஆப்கானிஸ்தான் உடன் ஆடும் அணிக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்கான பரிசோதனை சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடத்தப்பட்டது.

பரிசோதனையில் ஒவ்வொரு வீரரும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணான 16.1 ஐ பெற வெண்டும். இதில், தகுதி பெறாதவர்கள் வெளியேற்றப்பட்டு, தகுதி பெற்ற வீரர்கள் சேர்க்கப்படுவர்.

இந்தியா ஏ அணியில், சஞ்சு சாம்சன், தேர்ச்சி பெறாமல் வெளியேற்ற பட்டார். இதனால் கீப்பிங் செய்ய பாரத் முடிவு செய்யப்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர் இருவரும் இந்தியா ஏ அணியை வழிநடத்துகின்றனர். அதன் பிறகு, முகமது சமி நீக்கப்பட்டு நவதீப் சைனி சேர்க்கப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்பு பரிசோதனையில் ஈடுபட்ட அம்பதி ராயுடு தேர்ச்சி பெற தவறினார். இந்நிலையில், இன்று பெங்களூருவில் ரோஹித் சர்மாவிற்கு உடற்தகுதி பரிசோதனை நடந்தது. இதில் பிசிசிஐ நிர்ணயித்த 16.1 என்ற மதிப்பெண்ணை கடந்து தேர்ச்சி பெற்றார். இதனால், இங்கிலாந்து செல்லும் அணியில், இவரின் இடத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

தற்போது லிமிடெட் ஓவர்களில் அணியில் துணை தலைவராக செயல்பட்டு வருகிறார். விராத் கோலி கழுத்து வலியால் அவதி படுவதால், இடையில் காயம் காரணமாக வெளியேறினால் இவர் கேப்டன் பொறுப்பில் அமர்த்தப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

மேலும், இவருக்கு மூன்று வாய்ப்புகள் வேண்டும், ஒரு வாய்ப்பில் இவர் தேர்ச்சி பெறுவது சாத்தியமே இல்லை என இவரது உடல் அமைப்பை வைத்து ட்விட்டரில் ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ஆனால், தற்போது ரோஹித் ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் கிண்டலடித்த ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, இன்ஸ்டாகிமில் மகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். அதில் யோயோ டெஸ்ட் வெற்றி.. விரைவில் அயர்லாந்தில் சந்திக்கிறேன் என தெரிவித்தார்.

Vignesh G:

This website uses cookies.