உமேஷ் எங்களை திணறடித்துவிட்டார் : புகழும் ரோகித்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 46 ரன்களில் வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 14-வது ஆட்டம் மும்பைக்கும்-பெங்களூரு அணிகள் இடையே வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை தரப்பில் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
துவக்கத்திலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Bengaluru : Royal Challengers Bangalore Umesh Yadav celebrates the wicket of Aaron Finch of Kings XI Punjab during the IPL 2018 match at Chinnaswamy Stadium in Bengaluru on Friday. PTI Photo by Shailendra Bhojak(PTI4_13_2018_000255A)

சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷான் ஆகியோர் முதல் பந்திலேயே உமேஷ் பந்துவீச்சில் போல்டானார்கள். லெவிஸ் 65, கருணால் பாண்டியா 15, பொல்லார்ட் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
5 சிக்ஸர், 10 பவுண்டரியுடன் 52 பந்தில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 94 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 17 ரன்களிலும், மிச்செல் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
பெங்களூரு தரப்பில் உமேஷ், ஆண்டர்சன் தலா 2 விக்கெட்டுகளையும், வோக்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது.
பெங்களூருவுக்கு தொடக்கமே சரிவு: 214 ரன்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி தரப்பில் கேப்டன் விராட் கோலி, டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். டிகாக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி வீரர்களான டி வில்லியர்ஸ் வெறும் 1 ரன்னிலும், மந்தீப் சிங் 16 ரன்னிலும், ஆண்டர்சன் ரன் ஏதுமின்றியும், வாஷிங்டன் சுந்தர் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தது பெங்களூரு அணிக்கு சரிவை ஏற்படுத்தியது. மறுமுனையில் கோலி மட்டுமே நிலைத்து ஆடிக் கொண்டிருந்தார். 12 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பு வெறும் 87 ரன்களுக்கு பெங்களூரு அணி தத்தளித்துக் கொண்டிருந்தது.
அப்போது பீல்டிங் செய்த ஹர்திக் பாண்டியா வீசிய பந்து பட்டு விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் தலையில் காயம் ஏற்பட்டதால் அவர் வெளியேறினார். சர்பராஸ் கான் 5 , கிறிஸ் வோக்ஸ் 11, உமேஷ் யாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், மொகமது சிராஜ் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை தரப்பில் கருணால் பாண்டியா 3, பும்ரா, மிச்செல் மெக்ளேனகன் தலா 2, மார்கண்டே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பெற்றது.

Editor:

This website uses cookies.