உங்களுக்கு எதுவுமே சரியில்லை தம்பி, அதனால நான் சொல்றத செய்யுங்க ; ரோஹித் சர்மாவிர்க்கு அறிவுரை கொடுத்த முன்னாள் வீரர் !!

உங்களுக்கு எதுவுமே சரியில்லை தம்பி அதனால நான் சொல்றத செய்யுங்க ; ரோஹித் சர்மாவிர்க்கு அறிவுரை கொடுத்த முன்னாள் வீரர்..

நன்றாக விளையாட வேண்டும் என்றால் சிறிதுகாலம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிர்க்கு தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் அறிவுரை கொடுத்துள்ளார்.

2022 டி20 உலக கோப்பை தொடர் முதல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் கேப்டனும் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரருமான ரோஹித் சர்மா, நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அணியை மோசமாக வழி நடத்தியதன் காரணமாகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதன் காரணமாகவும் தற்பொழுது கிரிக்கெட் வட்டத்தில் விமர்சனப் பொருளாகியுள்ளார்.

இதனால் ரோஹித் சர்மாவிற்கு ஆதரவான கருத்துக்களும் எதிரான கருத்துகளும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களால் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒருசில முன்னால் வீரர்கள் ரோகித் சர்மாவை சர்வதேச தொடரிலிருந்து முற்றிலுமாக ஓய்வு அறிவித்து விடும்படி கூறினாலும், பெரும்பாலான முன்னாள் வீரர்கள் ரோஹித் சர்மாவை தற்காலிகமாக ஓய்வு எடுத்துவிட்டு பின்பு மீண்டும் புத்துணர்வுடன் விளையாடலாம் என அறிவுறையும் கொடுத்து வருகின்றனர்.

 

அந்த வகையில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித்., ரோகித் சர்மா சிறிது காலம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் புத்துணருடன் இந்திய அணிக்காக விளையாடலாம் என ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இதுகுறித்து கிரீம் ஸ்மித் பேசுகையில்.,“ஒரு அணியின் கேப்டனாக இருந்தாலே அது அவருடைய பெர்ஃபார்மென்ஸிர்க்கு சவாலாக இருக்கும். கேப்டனின் நெருக்கடி என்பது எப்பொழுதுமே போகாது. இதனால் ரோஹித் சர்மா சற்று ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் புத்துணருடன் விளையாடலாம். தற்பொழுது ரோகித் சர்மாவின் பார்ம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது , சில வருடங்களாகவே அவருடைய பேட்டிங் மோசமாக உள்ளது. குறிப்பாக ஐபிஎல் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எதிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை”.

“தற்பொழுது ரோகித் சர்மா மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளார். இதனால் நான் அவருடைய கேப்டன்ஷிப்பை அல்லது தலைமைத்துவ பண்பை விமர்சிக்கிறேன் என்று கிடையாது, யாருமே அவருடைய கேப்டன்ஷிப்பை விமர்சிக்கவில்லை, மாறாக அவருடைய பேட்டிங் சரியாக இல்லை,அவர் நல்ல ரன்களை அடிக்கவில்லை என்று தான் கூறுகிறார்கள் இது அவருக்கு சற்று நெருக்கடியாக தான் இருக்கும்” என்றும் ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக பேசியதோடு அவருக்கு தேவையான அறிவுரைகளையும் கிரீம் ஸ்மித் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.