இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரின் கூட்டணியும் நிச்சயம் இந்திய அணிக்கு உலக கோப்பை பெற்றுத் தரும் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.
இந்திய அணி கடைசியாக 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தோனி தலைமையில் கோப்பையை கைப்பற்றியது அதற்கு பின் இன்று வரை ஒருமுறைகூட உலக கோப்பை கைப்பற்றவில்லை.
குறிப்பாக தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகிய இருவரின் தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது,இருந்தபோதும் இவர்களால் ஐசிசியால் நடத்தப்படும் போட்டிகளில் இந்திய அணிக்கு ஒரு முறை கூட கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை இதன் காரணமாக இந்த இரண்டு பேருமே தனது பொறுப்பை ராஜினாமா செய்தனர்.
இதனால் இவர்களுக்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும் பொறுப்பேற்றுள்ளனர்.
இவர்களுடைய கூட்டணி நிச்சயம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தரும் என்று பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பேசி வரும் நிலையில்,இந்திய அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் இந்த இருவர் குறித்தும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரின் கூட்டணியும் நிச்சயம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுப்பார்கள், மேலும் இவர்கள் இருவருமே கிரிக்கெட்டில் போதுமான அனுபவம் பெற்றவர்கள், குறிப்பாக ராகுல் டிராவிட் நிலைமையை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படக் கூடியவர், நிச்சயம் இவர்கள் இருவருமே தங்களுடைய சிறப்பான பங்களிப்பை கொடுப்பார்கள். உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று 11 வருடங்கள் ஆகிவிட்டது அனைத்து கிரிக்கெட் வீரர்களும் உலக கோப்பை தொடரில் வெற்றி பெற வேண்டும் என்பதே ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து விளையாடி வருகிறார்கள். நிச்சயம் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரின் கூட்டணியும் நமக்கு உலகக் கோப்பையை பெற்று தரும்,அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.