விராட், ரோஹித் சர்மா இருவரில் யார் சிறந்த கேப்டன்! சரியாக கூறிய கோரி ஆண்டர்சன்!

இன்ஸ்டாகிராமில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கோரே ஆண்டெர்சன் உரையாடல் ஒன்றை நடத்தினார்.

நியூசிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆண்டெர்சன் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் தலைமையின் கீழும் ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளார். விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடியுள்ளார். அத்துடன் ரோகித் ஷர்மா கேப்டன்ஷிப்பில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியுள்ளார்.

New Zealand all-rounder Corey Anderson said that Rohit Sharma and Virat Kohli are both natural leaders but there style of captaining is a bit different from each other.

இந்நிலையில் ஆண்டெர்சன் இன்ஸ்டா பக்கத்தில் நடத்திய உரையாடலில், இந்த இரு கிரிக்கெட் வீரர்களின் கேப்டன் பாணியை குறித்து விவரிக்கும் போது ‘நல்ல திறமைசாளிகள்’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர் தனது உரையாடலின் போது, “இருவரும் மிகச் சிறந்த கேப்டன்கள்.

ஷர்மா அநேகமாக அந்த ரோலில் சற்று பின்வாங்கினார். அவர் உணர்ச்சிவசப்படுகிறார். வெற்றிப்பெற விரும்புகிறார், ஆனால் அதை இன்னும் கொஞ்சம் மறைத்து வைக்கிறார். கோலி தனது இதயத்தை உடையின் மீது அணிந்துக் கொண்டு நிறைய உணர்ச்சிகளைக் காட்டுகிறார். ஆனால் இந்த இருவரும் அணியின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் இயற்கையாகவே பிறவித் தலைவர்கள் ” என ஆண்டெர்சன் கூறியுள்ளார்.

மேலும் அவர், “அவர்கள் நல்ல திறமைசாளிகள், யூகங்களை வகுப்பதில் கில்லாடிகள். விளையாட்டைப் புரிந்துக் கொண்டு வெற்றிப் பெறுவது எப்படி என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் இந்திய அணியும் மிகவும் வெற்றிகரமாக உள்ளது” என்றார்.

“ரோஹித் சர்மா ஃபுல் ப்ளோவில் இருக்கும்போது எனக்கு மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவர். அவர் கிரிக்கெட்டை உலகின் எளிதான விளையாட்டு போல தோற்றத்தை ஏற்படுத்துகிறார். உலகின் தலைச் சிறந்த வீரர்கள்தான் அதைச் செய்கிறார்கள்” என்றும் கூறியுள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.