மிகப்பெரும் சாதனை படைத்த ரோஹித் சர்மா; ரசிகர்கள் பாராட்டு !!

மிகப்பெரும் சாதனை படைத்த ரோஹித் சர்மா; ரசிகர்கள் பாராட்டு

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் நான்கு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என முன்னிலையில் உள்ளது.

இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி-20 தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது டி-20 போட்டி வுண்ட் மாங்கானியில் இன்று நடக்கிறது.

MOUNT MAUNGANUI, NEW ZEALAND – FEBRUARY 02: India captain

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் ஷர்மா கேப்டனாக களமிறங்கினார். நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை.

இதையடுத்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு ராகுல் (45), ரோஹித் ஷர்மா (60) ஆகியோர் கைகொடுக்க இந்திய அணி 20 ஒவரில் 3 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 31 ரன்கள் அடித்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் இம்மைல்கல்லை எட்டிய எட்டாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.

HAMILTON, NEW ZEALAND – JANUARY 29: Rohit Sharma of India bats during game three of the Twenty20 series between New Zealand and India at Seddon Park on January 29, 2020 in Hamilton, New Zealand. (Photo by Phil Walter/Getty Images)

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் முதலிடத்தில் உள்ளார். இவரைத்தவிர திராவிட், கோலி, கங்குலி, தோனி சேவக் ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ள இந்திய வீரர்கள்

சச்சின் – 34,357 ரன்கள்

ராகுல் திராவிட் – 24,208 ரன்கள்

விராட் கோலி – 21,777 ரன்கள்

சவுரவ் கங்குலி – 18,575 ரன்கள்

தோனி – 17, 266 ரன்கள்

சேவக் – 17, 253 ரன்கள்

அசாருதீன் – 15,593 ரன்கள்

ரோஹித் ஷர்மா – 14, 029 ரன்கள்

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடாத துவக்க வீரர் ரோஹித் ஷர்மா அடுத்து பங்கேற்ற இரு போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார் மேலும் மூன்றாவது டி-20 போட்டியின் சூப்பர் ஓவரில் 2 இமாலய சிக்சர்கள் பறக்கவிட்டு இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். இப்போட்டியில் 60 ரன்கள் எடுத்த போது காயம் காரணமாக ரோஹித் ஷர்மா ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

Mohamed:

This website uses cookies.