கொரோனா வைரஸ் பாதிப்பு; லட்சக்கணக்கில் அள்ளி கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா !!

கொரோனா வைரஸ் பாதிப்பு; லட்சக்கணக்கில் அள்ளி கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா

நம் தேசம் மீண்டும் தனது காலில் நிற்க வேண்டும். அந்தப் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. நாம் பிரதமரின் நிவாரண நிதிக்கு எனது பங்காக ரூ.45 லட்சத்தையும், மகாராஷ்டிரா நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தையும், ஃபீடிங்க் இண்டியா மற்றும் ஆதரவில்லாத நாய்களின் நலனுக்கான அமைப்புக்கு தலா ரூ.5 லட்சத்தையும் அளித்துள்ளேன். நமது தலைவர்களுக்குப் பின்னால் நின்று அவர்களை ஆதரிப்போம் என்று கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 80 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 1,251 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 34 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கு தாராளமாக நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதேபோல், பல்வேறு மாநில முதல்வர்களு நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு பல்வேறு பிரபலங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மா கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 80 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில்;- நம் தேசம் மீண்டும் தனது காலில் நிற்க வேண்டும். அந்தப் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. நாம் பிரதமரின் நிவாரண நிதிக்கு எனது பங்காக ரூ.45 லட்சத்தையும், மகாராஷ்டிரா நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தையும், ஃபீடிங்க் இண்டியா மற்றும் ஆதரவில்லாத நாய்களின் நலனுக்கான அமைப்புக்கு தலா ரூ.5 லட்சத்தையும் அளித்துள்ளேன். நமது தலைவர்களுக்குப் பின்னால் நின்று அவர்களை ஆதரிப்போம் என்று கூறியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.