விராட் கோலி கேப்டன்… ரோஹித் சர்மாவிற்கு இடமே இல்லை; உலகக்கோப்பை தொடரின் தரமான ஆடும் லெவனை தேர்வு செய்த ஆஸ்திரேலியா
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்து அறிவித்துள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாத இறுதியில் துவங்கியது.
மொத்தம் 45 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
நவம்பர் 15ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. 16ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோத உள்ளன. சாம்பியனை தேர்வு செய்யும் இறுதி போட்டி 19ம் தேதி நடைபெற உள்ளது.
உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளது.
விராட் கோலியை தனது ஆடும் லெவனின் கேப்டனாக நியமித்துள்ள விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு ஆடும் லெவனில் இடமே கொடுக்கவில்லை. துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் டி காக் ஆகியோரை தேர்வு செய்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, மிடில் ஆர்டரில் விராட் கோலியுடன், ரச்சின் ரவீந்திரா, மார்கரம், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மார்கோ ஜென்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பந்துவீச்சாளர்கள் வரிசையில் முகமது ஷமி, ஆடம் ஜாம்பா, பும்ராஹ் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. 12வது வீரராக இலங்கை அணியின் மதுஷானகாவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ள 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த ஆடும் லெவன்;
குவிண்டன் டி காக், டேவிட் வார்னர், ரச்சின் ரவீந்திரா, விராட் கோலி, மார்கரம், கிளன் மேக்ஸ்வெல், மார்கோ ஜென்சன், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஆடம் ஜாம்பா, பும்ராஹ், தில்ஷன் மதுஷானகா.