தோனியை அடுத்து ரோகித் சர்மாவுக்கும் அபராதம் ! இதுதான் காரணம் என்று சொல்லும் பிசிசிஐ !
14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 14 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இருக்கிறது.
நேற்று (ஏப்.20) நடைபெற்ற 13வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி பவர்பிளேவில் 55 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய மும்பை 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் குவித்தது. இதில் ரோகித் சர்மா அடித்த 44 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. டெல்லி ஸ்பின்னர் அமித் மிஸ்ரா இந்த போட்டியில் 4 விக்கெட்களையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கி விளையாடிய டெல்லி அணி 19.1 ஓவரிலே 138 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் டெல்லி தொடக்க வீரர் ஷிகர் தவான் 45 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களும் குவித்துள்ளனர்.
இதில் மும்பை பவுலர்கள் ஜெயன்ட் யாதவ், பும்ரா, பொல்லார்டு, ராகுல் சஹார் தலா 1 விக்கெட் எடுத்து இருக்கிறார்கள். இதன்மூலம் டெல்லி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இந்த போட்டியில் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா கொடுக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசி முடிக்கவில்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. ஒரு அணி கொடுக்கப்பட்ட 90 நிமிடத்தில் பந்துவீசி முடிக்கவில்லை என்றால் அந்த அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிசிசிஐ ஐபிஎல் தொடங்கும் முன்னேர் அறிவித்துவிட்டது.
முதலில் கேப்டனுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்படும். இந்த தவறை மீண்டும் செய்தால் கேப்டனுக்கு இரு மாடங்களாகவும், அந்த போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு குறிப்பிட்ட தொகை அபராதம் விதிக்கப்படும். ஏற்கனவே, தோனி டெல்லிக்கு எதிரான போட்டியில் இதற்காக அபராதம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.