ரோஹித் சர்மா உடற்தகுதியில் பாஸ் இனி வரும் போட்டிகளில் விளையாடலாம் என பிசிசிஐ அறிவிப்பு.
காயம் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ரோகித் சர்மாவால் பங்கேற்க முடியாமல் போனது.
தனது உடற் தகுதியை நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் பெற முடியும் என்ற நிலையை பெங்களூருவில் உள்ள நேஷனல் அகாடமி சென்று பயிற்சி மேற்கொண்டார்.
அங்கு நடைபெற்ற உடற்தகுதி பயிற்சியில் தேர்ச்சி பெற்றார் என்று பிசிசிஐயின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுபற்றி பிசிசிஐ கூறியதாவது ரோஹித் சர்மா உடற்தகுதி டெஸ்டில் தகுதி பெற்று விட்டார் இனி வரும் போட்டிகளில் அவர் தாராளமாக விட விளையாடலாம் என்று கூறியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா தனது அணிக்கு இதுவரை 5 முறை டைட்டில் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார். பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. அந்த இக்கட்டான நிலையிலும் பிளெ-ஆஃப் சுற்று மற்றும் இறுதிச் சுற்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வெற்றி பெற்றுக்கொடுத்தார்.
காலில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் பங்கேற்க முடியாமல் போனது பின் காயத்தில் இருந்து மீண்ட இவர் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக செல்லவுள்ளார்.
ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது இவரால் முதல் இரண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது ஏனென்றால் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இவர் ஆஸ்திரேலியா சென்றவுடன் 14 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவார். இதனால் இவரால் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியது ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் தெரிவித்துள்ளனர்