ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோஹ்லி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் டி.20 தொடர் முடிந்த கையோடு நேராக ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த கிரிக்கெட் தொடருக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ., கடந்த வாரம் அறிவித்தது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், ரோஹித் சர்மாவுக்கு இடம் கொடுக்காதது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விராட் கோஹ்லியின் சதியால் தான் ரோஹித் சர்மா நீக்கப்பட்டுள்ளார் எனவும் ரசிகர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர், அதே போல் முன்னாள் வீரர்கள் பலரும் ரோஹித் சர்மாவை நிச்சயம் அணியில் எடுத்தே ஆக வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பி.சி.சி.ஐ., இன்று அதிரடி மாற்றத்தை செய்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-21 அடிலெய்டில் நடக்கிறது. கர்ப்பமாக இருக்கும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கவிருப்பதால், முதல் டெஸ்ட்டில் ஆடிவிட்டு இந்தியா திரும்புகிறார் விராட் கோலி.
அதனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடமாட்டார். அதேவேளையில், காயம் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாத நிலையில், இப்போது டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
விராட் கோஹ்லிக்கு தேவை என்றவுடன் ரோஹித் சர்மாவின் காயம் உடனடியாக சரியாகிவிட்டதா, இதில் எதோ அரசியல் இருக்கிறது என்றும் சில ரசிகர்கள் இதற்கும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.