விராட் கோலி இல்லை… இந்த இந்திய வீரர் தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரரான ரோஹித் சர்மா தான் சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என முன்னாள் வீரரான ரிடீண்டர் சோதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் கால் பதித்த ரோஹித் சர்மா, துவக்கத்தில் தனது மோசமான ஆட்டத்தால் கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டார். இதன்பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ரோஹித் சர்மா கடந்த 2019ம் ஆண்டு மீண்டும் அணியில் இடம்பிடித்து, தற்போது இந்திய அணியின் மிகப்பெரும் நம்பிக்கை நாயகனாக மாறியுள்ளார்.

சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கும் ரோஹித் சர்மாவிற்கு, இந்திய கேப்டன் விராட் கோலி அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை என்றாலும், முன்னாள் வீரர்கள் பலர் ரோஹித் சர்மா தான் மிகசிறந்த வீரர் என்பதை தொடர்ந்து கூறி வருகின்றனர். அதே போல் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கருத்தும் சமீபகாலமாக வலுத்து வருகிறது.

இந்தநிலையில், ரோஹித் சர்மா குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான ரிட்டீண்டர் சிங் சோதி, ரோஹித் சர்மா உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து சோதி பேசுகையில், “இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகிய 3 பேட்ஸ்மேன்களைத்தான் அதிகமாக சார்ந்திருக்கிறது. பேட்டிங் நேர்த்தியை பொறுத்தமட்டில் ரோஹித் சர்மா தான் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் திணறினாலும், தொடக்க வீரராக சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். ஓபனிங்கில் அவர் மிகவும் ஸ்பெஷலான வீரர். எதிரணியிடமிருந்து மேட்ச்சை பறித்துவிடக்கூடிய திறன் பெற்றவர் என்று ரிதீந்தர் சோதி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி துவங்க உள்ளது.

Mohamed:

This website uses cookies.