இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஓய்வு அளிக்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் ரோகித் சர்மா ஓய்வு கேட்டுக் கொண்டதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் ரோகித்சர்மா. அவர் இந்த ஆண்டு 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி ரன்களை குவித்துள்ளார்.
இதற்கிடையே அவர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஓய்வு அளிக்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற ஜனவரி மாதம் இலங்கை அணியுடன் மூன்று இரவு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டி 5-ந்தேதி கவுகாத்தியில் நடக்கிறது.
இந்த தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் ரோகித்சர்மா தனக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து ஒய்வு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த ஆண்டு ரோகித் சர்மா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடினார்.
சில தொடரில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோது பொறுப்பு கேப்டன் பதவியையும் ஏற்று அணியை வழி நடத்தினார். இதனால் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் பேட்ஸ்மேனான சூரிய குமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி என்று தெரிகிறது. அப்படி அவருக்கு வாய்ப்பு அளித்தால் கேதர் ஜாதவின் இடம் கேள்விக் குறியாகி விடும்.
இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளும், இரண்டாவது ஆட்டத்தில் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் அபார வெற்றி பெற்றன.
கட்டக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி ஒரு நாள் தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியில் கேப்டன் கோலி, ரோஹித், ராகுல், ஆகியோா் முக்கியப் பங்கு வகித்தனா். முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 315/5 ரன்களையும், பின்னா் ஆடிய இந்திய அணி 316/6 ரன்களையும் குவித்தன. ஆட்ட நாயகன் விருது கோலிக்கும் தொடர் நாயகன் விருது ரோஹித் சர்மாவுக்கும் வழங்கப்பட்டன.