இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கே எல் ராகுல், பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூன்று வீரர்களும் இந்திய அணியில் தலைவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
லிமிடெட் ஒரு கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மாவை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் முடிந்தவுடன் இந்திய அணியின் டெஸ்ட் தொடருக்கான கேப்டனாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது
இந்த நிலையில் இந்திய அணியில் மூன்று விதமான தொடர்களில் கேப்டனாக திகழும் ரோஹித் சர்மா வீடியோ கான்பரன்ஸ் மூலம் தன்னுடைய கேப்டன்ஷிப் எப்படி இருக்கும் என்றும் இந்திய அணி நடைபெறும் சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் செய்தியாளர்களுடன் மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, நான் இந்திய அணியில் இருக்கும் வீரர்களிடம் அதை செய் இதை செய்யாதே என்று எப்பொழுதும் கூறிக்கொண்டே இருக்க மாட்டேன், அவர்கள் அனைவருமே மிகவும் பக்குவமானவர்கள், அவர்களுக்கு தான் என்ன செய்யவேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.நான் செய்வதெல்லாம் அவர்களுடன் நின்று தேவையான நேரத்தில் வழி காட்டுவதுதான், இதை செய்வதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், நாங்கள் அனைவரும் சிலரால் பயிற்றுவிக்கப்பட்டு இந்த நிலைமையில் இந்த ராங்கில் (Rank) இருக்கிறோம் இதே போன்று தான் அனைவருக்கும் நடக்கும், இது ஒரு இயற்கையான சுழற்சி முறை என்று கூட கூறலாம்.அதேபோன்று இந்திய அணியில் முக்கிய பங்காற்றும் பும்ரா கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூன்று வீரர்களும் இந்திய அணியின் வெற்றிக்காக பலமுறை உதவியுள்ளனர்.இவர்கள் இந்திய அணியில் தலைவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள், இவர்கள் அனைவரும் தன்னுடைய பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுகிறார்கள, ஆனால் நாங்கள் யாருக்கும் அதிகமான அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்று நினைக்கிறோம். நாங்கள் நினைப்பதெல்லாம் போட்டியை ரசித்து திறமையை வெளிப்படுத்தி விளையாட வேண்டும் என்பது மட்டுமே என்று ரோஹித் சர்மா பேசியிருந்தார்.
மேலும் பேசிய அவர், தற்பொழுது நான் மிகவும் தெளிவாக உள்ளேன் ஒவ்வொரு வீரருக்கும் வேலை பளுவைக் குறைப்பதற்காக முயற்சி செய்து வருகிறேன்,இந்திய அணியில் இருக்கும் அனைவருமே எங்களுக்கு முக்கியம். இந்திய அணியில் விளையாடும் வீரர்களை தொடர்ச்சியாக விளையாட வைக்காமல் அவர்களுக்கு தேவைப்படும் ஓய்வை அளித்து விளையாட வைக்க வேண்டும் என்று யோசித்து வருகிறோம்.இதன் காரணமாக வீரர்கள் காயம் அடைவதிலிருந்து தடுக்கலாம் என்றும் ரோகித் சர்மா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.