மோசமான சாதனை படைத்தார் மும்பை டான் ரோஹித் சர்மா !!

மோசமான சாதனை படைத்தார் மும்பை டான் ரோஹித் சர்மா

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் டக் அவுடானதன் மூலம் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தென் ஆபிர்க்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து கோல்டன் டக் அவுடானார்.

இதன் மூலம் டி20 போட்டிகளில் நான்கு முறை டக்அவுட் ஆகி, அதிக முறை டக்அவுட் ஆகிய முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா, யூசுப் பதான் ஆகியோர் மூன்று முறை டக்அவுட் ஆகியிருந்தார்கள். இவர்களின் மோசமான சாதனையை முறியடித்து ரோகித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார்.

ரோகித் சர்மா 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டியில் சதம் அடித்தார். அதை தவிர்த்து ஐந்து இன்னிங்சில் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்டில் 78 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.