கேலி செய்த ரோஹித் சர்மாவிற்கு, கிண்டலாக பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட் !!

கேலி செய்த ரோஹித் சர்மாவிற்கு, கிண்டலாக பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட் !!

எனது குழந்தையைப் பராமரிப்பவராக இருப்பீர்களா? என்று ரிஷப் பந்த்தை ரோஹித் சர்மா கிண்டல் செய்துள்ளார்.

2015-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி ரோஹித்துக்கும் ரித்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சமைரா என பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரோஹித் சர்மா ரிஷப் பந்த்தின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள பதிவைக் குறிப்பிட்டு  ”வணக்கம்… நீங்கள் சிறந்த குழந்தை பராமரிப்பாளர் என்று கேள்விப்பட்டேன். எங்களுக்கு ஒருவர் தற்போது தேவைப்படுகிறார். எனது மனைவி நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்” என்று பதிவிட்டார்.

இதற்கு ரிஷப் பந்த்,  ”ஹாஹாஹா அண்ணா, சாஹல் அவரது பணியைச் சரியாக செய்யவில்லையா…! உங்களது குழந்தையைப் பராமரிப்பவராக இருப்பதற்கு மகிழ்ச்சியே.. வாழ்த்துகள்”  என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆஸ்திரேலியா தொடரில், இதற்கு ரிஷப் பந்த் களமிறங்கியபோது பெய்ன் அவருக்கு பின்னால் நின்றுகொண்டு, ”ஒருநாள் போட்டிக்கு தோனி வந்து விட்டார். நாம் இவரை (ரிஷப் பந்த்தை) ஹோபார்ட் ஹரிகேன்ஸுக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பேட்ஸ்மென் தேவை.  ஆஸ்திரேலிய விடுமுறையை கொஞ்சம் நீட்டித்துக் கொள்…ஹோபார்ட் மிக அழகான நகரம்.. அங்கு இவருக்கு நல்ல வாட்டர்ஃபிரண்ட் அபார்ட்மென்ட்டை அளிக்கலாம்…நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்துச் செல்லும் போது என் குழந்தைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கிண்டல் செய்தார்.

பதிலடி அளிக்கும் வகையில் ரிஷப் பந்த், பெய்னை தற்காலிக கேப்டன் என்று விமர்சித்தும், அது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் கவர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடரை வென்ற இந்திய அணி;

 ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று, அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கெத்தாக கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தொடரை வென்றதன் மூலம் பல்வேறு வரலாறுகளை மாற்றி எழுதிய இந்திய அணி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ஒரே தொடரில் கவர்ந்தது.

இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய ஒரு சில வீரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இதன் காரணமாகவே இந்திய அணியின் 72 ஆண்டு கால கனவு நனவாகியது.

Mohamed:

This website uses cookies.