இந்திய டி20 அணியின் கேப்டனாக விராட் கோலி இருக்கக்கூடாது எனவும் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.
நவம்பர் 10 ஆம் தேதியான நேற்று டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது பதிமூன்றாவது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த கோப்பை வெற்றியின் மூலம் ரோஹித் சர்மா 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை பெற்றுக் கொடுத்த ஒரே கேப்டனாக மாறினார். இப்படி பல சாதனைகள் படைத்து இருக்கிறார்.
ஒரு வீரராக ரோகித் சர்மா 6 முறை ஐபிஎல் தொடரை கைப்பற்றி இருக்கிறார். ஒரு கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் தொடரை கைப்பற்றி இருக்கிறார். அதேநேரத்தில் இந்திய அணிக்காக டி20 கேப்டனாக இருந்த ரோகித் சர்மா ஆசிய கோப்பை தொடரை வென்றும் கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு சிறந்த கேப்டனாக பலமுறை தன்னை நிரூபித்திருக்கிறார். அதேநேரத்தில் கடந்த பல ஆண்டுகளாக விராட் கோலியிடம் இருந்து 20 கேப்டன்ஷிப்பை பறித்து அதை ரோஹித் சர்மாவிடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல். அவர் கூறுகையில்…
கேள்வியே வேண்டாம் இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோகித் சர்மா தான் இருக்கவேண்டும். அணி வீரர்களை சரியாக மேலாண்மை செய்து மிகச் சிறந்த தலைவராக இருக்கிறார். அதே நேரத்தில் டி20 போட்டிகளில் எப்படி வெல்ல வேண்டும் என்று மிகக் கச்சிதமாக தெரிந்து வைத்திருக்கிறார். அதேநேரத்தில் கேப்டன்ஷிப்பை மாற்றி கொடுத்து விட்டால் விராட் கோலிக்கு ஓவிய எடுத்தது போல் இருக்கும் ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் மைக்கேல் வாகன்.