முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா படைக்கப்பபோகும் பெரும் சாதனை!

பங்களாதேஷூக்கு எதிரான முதல் டி-20 தொடரில் ரோகித் சர்மா சாதனை படைப்பார் என்று தெரிகிறது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி, டெல்லியில் நாளை நடக்கிறது. அங்கு காற்று மாசு பிரச்னை தீவிரமாக உள்ள நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், இரு அணிகளும் டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. பங்களாதேஷ் வீரர்கள் முகக்கவசம் அணிந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

நாளை நடைபெறும் போட்டியில் ரோகித் சர்மா சாதனை படைக்க இருக்கிறார். அதாவது டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் இருக்கிறார், விராத் கோலி. அவர் 67 போட்டிகளில் 2450 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

 

ரோகித் சர்மா 90 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நாளை நடக்கும் போட்டியில் ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்தால், அவர், அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

LEEDS, ENGLAND – JULY 06: Jasprit Bumrah high fives Rohit Sharma of India after he gets Angelo Matthews of Sri Lanka out during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Sri Lanka and India at Headingley on July 06, 2019 in Leeds, England. (Photo by Nathan Stirk/Getty Images)

இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிசிசிஐ தலைவர் சவுரவ்கங்குலிக்கு கடிதம் எழுதியிருந்தனர். டெல்லியில் நிலவி வரும் மோசமான
காற்று சூழ்நிலை 4 மணி நேரம் அணியில் விளையாடுவது வீரர்களை மோசமாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதனால், திட்டமிட்டபடி டெல்லியில் முதல் டி20 போட்டி நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று சவுரவ் கங்குலி கூறியதாவது:

முதல் டி20 போட்டி டெல்லியில் திட்டமிட்டபடி நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Mohamed:

This website uses cookies.