ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடுவாரா..? விராட் கோஹ்லி வெளியிட்ட தகவல் !!

ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடுவாரா..? விராட் கோஹ்லி வெளியிட்ட தகவல்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி குஜராத்தின் ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 304 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றிருந்தாலும், நேற்றைய போட்டியின் பீல்டிங்கின் போது தோள்பட்டையில் காயமடைந்த ரோஹித் சர்மா, அடுத்த போட்டியில் விளையாடுவாரா இல்லையா..? என்ற அச்சமும் ரசிகர்கள் மனதில் இருந்து வருகின்றது.

இந்த நிலையில், போட்டியின் முடிவை தொடர்ந்து இது குறித்து பேசிய விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா அடுத்த போட்டியில் விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மாவின் தோள்பட்டையில் அடிபட்டுள்ளது. இருந்த போதிலும் அவர் அடுத்த போட்டியில் பூரண உடல்நலத்துடன் விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெற்றி குறித்து விராட் கோஹ்லி பேசியதாவது;

விராட் கோலி தன் 4ம் நிலை பற்றியும் ராகுல் பேட்டிங் பற்றியும் அணியின் உத்தி பற்றியும் ஆட்டம் முடிந்த பிறகு மனம் திறந்தபோது, “4ம் நிலையில் இறங்கியவுடன் பதற்றம் தொற்றிக் கொண்டது, நாம் சமூகவலைத்தள காலத்தில் வாழ்கிறோம். இங்கு உடனே பதற்றப் பொத்தான் சீக்கிரமே அழுத்தப்பட்டு விடுகிறது.

சிறந்த அணியை நாம் களமிறக்க வேண்டியுள்ளது, இன்று ராகுலைப் பார்த்தீர்கள். ஒருவரை விரைவில் அப்படியெல்லாம் தீர்ப்பு எழுதி விட முடியாது. 5ம் நிலையில் இறங்கி இந்த மாதிரி ரன்களைக் குவித்துள்ளார், சர்வதேச மட்டத்தில் கே.எல்.ராகுலின் அபார இன்னிங்ஸ் இது என்றே நான் கூறுவேன். முதிர்ச்சியும் இருந்தது கிளாசும் இருந்தது.

ஓய்வறையில் நாங்கள் என்ன முடிவெடுக்கிறோம் என்பதில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம், வெளியே ஏகப்பட்ட பதற்றங்கள், கருத்துக்கள், இவை பற்றி நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. 3ம் நிலையில் இறங்கியது அணிக்கு நல்லதென்றால் எனக்கும் அதில் மகிழ்ச்சிதான்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஷிகர் தவண் நம் சீரான ஆட்டக்காரர். தவணும், ரோஹித்தும் ரன்கள் குவித்தால் அது ஒட்டுமொத்த அணிக்கே நன்மையாகிறது. பவுலர்கள் மூவருமே யார்க்கர்களை பிரமாதமாக வீசினர்” இவ்வாறு கூறினார் விராட் கோலி.

Mohamed:

This website uses cookies.