“விராட் கோலி ஓகே தான்.. ஆனா ரோஹித் தான் டாப்” சண்டை மூட்டி விடுகிறாரா புதிய பேட்டிங் கோச்!!

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் புதிய பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டும் அல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அண்மையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் விராட் கோலியை விட மிகச் சிறப்பாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் இருந்து வருவதை நம்மால் காண முடிந்தது. இதற்கு உலக கோப்பை தொடரும் ஒரு சான்று.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவிற்கு தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்து வந்தது ஒவ்வொரு தொடரிலும் இடம்பெற்று வந்தாலும் ஆடும் 11 வீரர்களின் பட்டியலில் இடம் பெறுவது ரோகித் சர்மாவிற்கு எட்டாக்கனியாக இருக்கின்றது அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் கீழ் வரிசையில் இழுக்கப்படுவதால் பெரிதும் செயல்பட முடியவில்லை இதற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரோஹித் சர்மாவை தவிர்க்க வேண்டும் கருத்துக்களை பதிவிட்டு வந்தேன் அதன் எதிரொலியாக துவக்க வீரராக இருந்த தொடர்ந்து வந்ததால் அவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தடையை நீக்கி விட்டு போய் சேருமா துவக்க வீரராக கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது தெரிவுக் குழுவும் அதை ஒப்புக் கொண்டுள்ளது.

இது குறித்து புதிதாக பேட்டிங் பயிற்சியாளராக அமர்த்தப்பட்ட விக்ரம் ரத்தோர் கூறுகையில், விராட் கோலியை விட டெஸ்ட் போட்டிகளிலும் ரோகித் சர்மா சிறப்பாக ஆடக்கூடியவர். ஆனால், அவருக்கு ஏன் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது தற்போது வரை புரியாத ஒன்றாக இருக்கிறது. நிச்சயம் ஒருநாள் போட்டியைப் போலவே டெஸ்ட் போட்டிகளிலும் துவக்க வீரராக களமிறங்கி அசத்துவார் என நம்புகிறேன்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் 11 வீரர்கள் குறித்து தற்போது வரை முடிவு செய்யவில்லை. ஆனால் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு கிடைத்தால் லிமிடெட் ஓவர் போட்டிகளை போலவே துவக்க வீரராக களமிறங்கி அசத்தக்கூடியவர் என்றார்.

ஏற்கனவே அணியில் விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே முரண்பாடு உள்ளது என்ற பேச்சுகள் அடிப்பட்டுவரும் நிலையில் அணியின் புதிய பயிற்சியாளர் இப்படிக் கூறியிருப்பது மேலும் பிரச்சினையை உண்டாக்கும் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Mohamed:

This website uses cookies.