சர்வதேச டெஸ்ட் தொடருக்கான தரவரிசை பட்டியலில் வீழ்ச்சி அடைந்த இந்திய அணி பேட்ஸ்மென்கள்.
சர்வதேச டெஸ்ட் தொடருக்கான சிறந்த பேட்ஸ்மென்கள்
சர்வதேச டெஸ்ட் தொடருக்கான சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மென்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் அதே இடத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 754 புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்திலும், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 747 புள்ளிகள் பெற்று 10வது இடத்திலும் உள்ளார்.
முதல் இரண்டு இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுசேன்(892), ஸ்டீவ் ஸ்மித்(845) இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச டெஸ்ட் தொடருக்கான சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான பட்டியல்
டெஸ்ட் தொடருக்கான சிறந்த பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் வழக்கம்போல் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்(901) புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்,இரண்டாவது இடத்தில் ரவி அஸ்வின்(850), 3வது இடத்தில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா(835), மற்றும் 4வது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா (830) இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச டெஸ்ட் தொடருக்கான சிறந்த ஆல்ரவுண்டர்களின் தரவரிசைப் பட்டியல்
சர்வதேச டெஸ்ட் தொடருக்கான சிறந்த ஆல்ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலில், கடந்த டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி மாஸ் காட்டிய ரவீந்திர ஜடேஜா 385 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார், இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவி அஸ்வின் தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தில் முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தரவரிசை முன்னேறியது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முன்பு போல் சிறப்பாக செயல்படாமல் சொதப்பி வருவது வருத்தம் அளிக்கிறது.