ரோஹித் சர்மாவுக்கு என்ன தான் ஆச்சு.. ஏன் அவர் அணியில் ஆடவில்லை; கடைசியாக வாயைத்திறந்த முன்னாள் வீரர்!

ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளரும் முன்னாள் இந்திய வீரருமான ஜாகிர் கான் சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியா சென்று ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அணி ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கையில் வெளியிடப்பட்டது. அதில் மூன்றுவித போட்டிகளிலும் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. ஏனெனில் அவர் அதற்கு சில நாட்கள் முன்பாக காயம் ஏற்பட்டு சில ஐபிஎல் போட்டிகளை விளையாடாமல் இருந்தார்.

இதனை கருத்தில் கொண்டு அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக பிளே ஆப் சுற்றில் மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாடினார். இதனால் ஆஸ்திரேலிய தொடரில் அவர் பெயர் ஏன் இடம்பெறவில்லை என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

இறுதியாக விராட் கோலி ஆடாத கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு பதிலாக ரோகித் சர்மா விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் சற்று அமைதி கொண்டனர். இருப்பினும் டி20 போட்டியில் விளையாடும் அளவிற்கு அவர் தகுதி பெற்றிருப்பதால் ஏன் டி20 போட்டிகளில் ஆடும் அணியில் அவரை சேர்க்கவில்லை எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. தற்போதுவரை ரோகித் சர்மாவின் காயம் எந்த அளவிற்கு இருக்கின்றது என சரிவர தெரியபடுத்த படுவதில்லை.

இதனை சுட்டிக் காட்டி பேசிய விராட்கோலி, வீரர்களின் காயத்தின் நிலை எந்த அளவிற்கு உள்ளது. குணமடையும் விதம் எப்படி இருக்கின்றது என எனக்கு உரிய முறையில் தெரிவிப்பது இல்லை. சரியான தொலை தொடர்பு இல்லை என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இந்த விஷயம் குறித்து சில உண்மைகளை வெளியிட்டு பேசியிருக்கிறார் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் இந்திய வீரருமான ஜாகீர்கான். அவர் கூறுகையில், “சில போட்டிகளில் ரோகித் சர்மா வெளியில் இருந்தார். ஆனால் அவரை பரிசோதித்து பார்க்கையில் டி20 போட்டிகள் விளையாடும் அளவிற்கு நன்கு குணமடைந்தார். ஆதலால் அவரை பிளே ஆப் சுற்றில் விளையாட வைத்தோம். அதன் பிறகு சில நாட்கள் வீட்டில் இருந்த அவர் நேரடியாக தேசிய அகடமி பயிற்சிக்கு சென்றுவிட்டார். தற்போது வரை அவரது காயத்தின் நிலையை தெரியப்படுத்தாமல் இருப்பது ஏன் என்பது எனக்கு புரியவில்லை.

பிசிசிஐ இந்த விதத்தில் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். அணி நிர்வாகத்திற்கும் கேப்டனுக்கும் ஒரு முக்கிய வீரரின் காயம் எந்த அளவிற்கு இருக்கிறது. அவர் எப்போது குணமடைவார் என்பதை தெரிவிக்க வேண்டும். இறுதிப் போட்டியில் கிட்டத்தட்ட 70 ரன்கள் அவர் அடித்தும் அவரது உடல் தகுதியை ஏன் சரியாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதும் புரியவில்லை.

எது எப்படி இருப்பினும் வருகிற 11ஆம் தேதி அவருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை நடைபெறுவதால் அதை முடித்த பிறகு என்ன முடிவை பிசிசிஐ எடுக்க இருக்கிறது என பொருத்திருந்து பார்ப்போம் என்று பேட்டியளித்தார்.

Mohamed:

This website uses cookies.