கடவுள வேண்டிக்கங்க… இவர் 10 ஓவராச்சும் விளையாண்டா தான் ஆஸ்திரேலியாவிற்கு ஆப்பு வைக்க முடியும்; ஆகாஷ் சோப்ரா ஓபன் டாக்
உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ரோஹித் சர்மா 10 ஓவர்களாவது பேட்டிங் செய்ய வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தேர்வு செய்யும், உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி 19ம் தேதி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டியில் மோத உள்ளன.
கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி, இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை எப்படியாவது வெல்ல வேண்டும் என விரும்பும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர், இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, இறுதி போட்டி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், இறுதி போட்டியில் ரோஹித் சர்மா 10 ஓவர்களாவது விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “இறுதி போட்டியில் ரோஹித் சர்மா 10+ ஓவர்கள் பேட்டிங் செய்தாலே அது இந்திய அணிக்கு பெரிய பலத்தை கொடுத்துவிடும். ஆடுகளம் மந்தமாக இருந்தால் பெரிய ஸ்கோருக்காக விளையாட முடியாது. ரோஹித் சர்மாவின் பங்களிப்பு இறுதி போட்டியில் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இறுதி போட்டிக்காக கடவுளிடம் எதாவது பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றால், ரோஹித் சர்மா நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்றே பிரார்த்திக்க வேண்டும். ரோஹித் சர்மா களத்தில் நின்றால் இந்திய அணிக்கு தேவையான மற்ற அனைத்தும் தானாக நடந்துவிடும்” என்று தெரிவித்தார்.