விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 159 ரன்கள் அடித்ததன் மூலம் 6 வருட சாதனையை தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.
விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று விண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் மற்றும் கே எல் ராகுல் இருவரும் சதம் அடித்தனர்.
லோகேஷ் ராகுல் 102 அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சதமடித்து அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 138 பந்துகளில் 17 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களுடன் 159 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் ஒரு வருடத்தில் ஒருநாள் தொடரின் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கொர் அடித்த இந்திய வீரர் சாதனையை தொடர்ந்து 7வது வருடமாக நிகழ்த்துகிறார். ரோகித் சர்மா 2013 முதல் இந்த சாதனையை படைத்தது வருகிறார்.
2013 முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் இந்திய வீரர்கள் மத்தியில் அடிக்கப்பட்ட ஒரு இன்னிங்ஸ் அதிகபட்ச ஸ்கொர்கள் பட்டியல்: (ஒருநாள் போட்டிகளில்)
2013 – ரோஹித் (209)
2014 – ரோஹித் (264)
2015 – ரோஹித் (150)
2016 – ரோஹித் (171 *)
2017 – ரோஹித் (208 *)
2018 – ரோஹித் (162)
2019 – ரோஹித் (146 *)
தொடர்ந்து 7 வருடங்களாக இதனை செய்து முடித்திருக்கும் ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார். மேலும், 2019 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா 77 சர்வதேச சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஒரு வருடத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சரும் இதுவாகும்.
இந்த ஆண்டு இதுவரை ரோகித் சர்மா 2379 ரன்கள் அடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.