வீடியோ: ஜான்டி ரோட்ஸை விட செம்மையா ஃபீல்டிங் செய்த ரோகித்… வியந்து பார்த்த ரசிகர்கள்!

விண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக பீல்டிங் செய்ததாக ரசிகர்கள்  சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர். அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. விண்டீஸ் வீரர்கள் இந்திய பந்துவீச்சை சிக்ஸர் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர்.

ஒருசில நேரங்களில் இந்தியாவின் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. ஆனால், ஒருசில நேரங்களில் மிகவும் அசத்தலாக பீல்டிங் அமைந்தது. குறிப்பாக, ஹெட்மயர் அடித்த பந்தை வாஷிங்டன் சுந்தர் பிடிக்க தவறினார்.

பந்து பவுண்டரி நோக்கி சென்றது. கிட்டத்தட்ட பவுண்டரி சென்றது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ரோகித் சர்மா உள்ளே பாய்ந்து பவுண்டரியை தடுத்தார். இது வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

ரோகித் உடல்தகுதி மோசமாக இருக்கிறது. அவரால் வேகமாக ஓடி பந்தை எப்படி பிடிக்க முடியும் என விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்கு இந்த பீல்டிங் வாயடைக்க வைக்கும் வண்ணம் இருந்தது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடினர்.

வீடியோ பதிவு:

முதல் டி20 போட்டியை பார்க்கையில்,

முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக. ஹெட்மயர் 56, பொல்லார்ட் 37, கிங் 31 மற்றும் ஹோல்டர் 24 ரன்கள் அடித்தனர்.

208 என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கேப்டன் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அதிரடியை வெளிபடுத்தி அணியை வெற்றி பாதைக்கு எடுத்து சென்றனர்.

18.4 ஓவர்களில் 209 ரன்கள் அடித்த இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக, கோலி 94*, கேஎல் ராகுல் 62 ரன்கள் அடித்தனர்.

Prabhu Soundar:

This website uses cookies.