இந்திய அணியில் ரிஷப் பண்ட் நீக்கம்… அணியில் இணையும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் திடீரென நீக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு பதிலாக புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 130 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் ஆட வைக்கப்படவில்லை.

முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருந்த சுபமன் கில், அந்த தொடரில் 3 போட்டியிலும் வெளியில் அமர்த்தப்பட்டார்.

ADELAIDE, AUSTRALIA – DECEMBER 10:
Jasprit Bumrah and Rishabh Pant of India celebrate getting a wicket during day five of the First Test match in the series between Australia and India at Adelaide Oval on December 10, 2018 in Adelaide, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)

வங்கதேச தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதிலும் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெளியில் அமர்த்தப்பட்டிருந்தார். அதேபோல் ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்திற்காக வங்கதேசத்துடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெளியில் அமர்த்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்திய உள்ளூர் போட்டிகளில் தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்த இரு வீரர்களும் டெஸ்ட் அணியிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன.

போட்டியில் இடம்பெற்று ஆடிவரும் விருத்திமான் சஹா பாதுகாப்பிற்காக ஆந்திர கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஸ்ரீதர் பரத் டெஸ்ட் அணியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளார்.

சுபமன் கில் பஞ்சாப் அணிக்காகவும், ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காகவும் சையத் முஷ்டக் அலி தொடரில் ஆட இருக்கின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.