சச்சின் மற்றும் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் டைலர்

சச்சின் மற்றும் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் டைலர்.

நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான இவர் தொடர்ந்து ஆறு அரை சதங்கள் அடித்து சச்சின் மற்றும் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அந்த அணிக்கு எதிராக 137 ரன்கள் குவித்தார். அவருக்கு 20 ஆவது ஒருநாள் போட்டியில் சதம் ஆகும் மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அற்புதமாக ஆடி வருகிறார். அவர் கடைசி1 0 போட்டியில்  அடித்து துவம்சம் செய்து உள்ளார். 1, 59, 113, 10, 181*, 80, 86*, 54, 90, and 137. இப்படி வரிசையாக ரன்கள் குவித்துள்ளார் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து ஐந்து அரை சதங்கள் மட்டுமே அடித்தனர் தற்போது இவர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன் குவித்துள்ளது. ராஸ் டெய்லர், நிக்கோலஸ் அபார சதம் அடித்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையில், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இப்போது நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளை வென்று நியூசிலாந்து அணி, ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. மூன்றாவது ஒரு நாள் போட்டி நெல்சனில் இன்று நடந்து வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து வீரர்கள் குப்திலும் முன்றோவும் தொடக்க ஆட்டக் காரர்களாக களமிறங்கினர். குப்தில் 2 ரன்னிலும் முன்றோ 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இரண்டு பேர் விக்கெட்டையும் கேப்டன் மலிங்கா வீழ்த்தினார். பின்னர் கேப்டன் கனே வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் இணைந்தனர். இருவரும் அதிரடியாக ஆடினர். வில்லியம்சன் 55 ரன் எடுத்து சண்டகன் பந்துவீச்சு ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய ராஸ் டெய்லருடன் ஹென்றி நிக்கோலஸ் இணைந்தார். ராஸ் டெய்லர், அபாரமாக ஆடி சதம் அடித்தார். இது அவரது 20வது சதம். அவர் 137 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து நிக்கோலஸூடன் நீஷம் இணைந்தார். இருவரும் அடித்து விளாசினர். நிக்கோலஸ், 80 பந்துகளில் 124 ரன்னும் நீஷம் 6 பந்துகளில் 12 ரன்னும் விளாச, ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன் குவித்தது.
மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார். சண்டகன் ஒரு விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து இலங்கை அணி, பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.