ஐ.பி.எல் 2018 : பெங்களூரு அணியில் இனி இவர் இல்லை?

2018 ஐ.பிஎல் : கோலியை தக்க வைக்க முடியாத நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ்

2017 முடியவில்லை நிலையில் அடுத்த வருட ஐ.பி.எல் போட்டிக்கான வேலைகள் மும்மூரமாக ஆரம்பித்து விட்டன. 10 ஐ.பி.எல் தொடர்கள் முடிந்துள்ள நிலையில் 11ஆவது ஐ.பி.எல் தொடருக்கு அனைத்து அணிகளையும் கலந்து போட்டு புதிய ஏலம் நடைபெறும். இந்த ஏலம் ஜனவரி 27 மற்றும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 8 அணிகளுக்காக வீர்ரகள் கலாய்த்து போடப்பட்டு மீண்டும் தேவையான வீர்ரகள் ஏலம் எடுக்கப்படுவர்.

ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளது ஐ.பி.எல் கமிட்டி. தற்போது உள்ள வீரர்களில் மூன்று வீரர்களை ஏலத்தில் விடாமல் அப்படியே வைத்துக்கொள்ளலாம். மேலும், இரண்டு வீரர்களை ஏலத்தின் போது Right To Match மூலம் தக்க வைத்து கொள்ளலாம்.

அதே போல மொத்தம் ஏலத்திற்கு ஒதுக்கப்படும் தொகை ₹ 80 கோடி மட்டுமே. ஆனால், முதலில் நாம் தக்க வைக்கும் மூன்று வீரர்களுக்கான அதிகபட்ச தொகை மொத்த ஏலத் தொகையில் இருந்து கழிக்கப்படும் எனவும் ஐ.பி.எல் கமிட்டி கூறியுள்ளது.

இந்த விதி காரணமாக எந்த அணிக்கு தலைவலியோ தெரியாது, ஆனால் கண்டிப்பாக பெங்களூரு அணிக்கு பெருத்த தலை வலி தான்.

ஏனெனில் முதலில் தக்க வைக்கப்படும் வீரருக்கு அதிக தொகை செலவாகும். மற்ற அணிகளுக்கு எல்லாம் 8 முதல் 12 கோடிக்குல் முடியும் ஜேந்த செலவு விராட் கோலி ஒரு வீரருக்கு மட்டும் 15 கோடிகள் போகிறது. ஏற வருடம் அவர் வாங்கிய அதிக தொகை அதை தான்.

ஒருவேளை முதல் வீரருக்கு 12 கோடி வைத்து விராட் கோலியை தேர்வு செய்தால் அவர் ஒத்துழைக்கும் பட்சத்தில் தான் அணிக்கு திரும்ப முடியும். இந்த ஏலத்தொகை போதாது எனக் கூறினால் அவர் இன்னும் அதிக தொகைக்கு போது ஏலத்தில் செல்லலாம்.

மொத்தம் மூன்று வீர்ரகள் தக்க வைக்கும் போது கிட்டத்தட்ட 80 கோடிகளில் பாதிக்கு மேல் பெங்களூரு அணிக்கு செலவாகிறது. இதனால் தற்போது எந்த மூன்று வீரகளை தக்க வைத்துக எவ்வளவு செலவு செய்வது என முழித்து வருகிறது பெங்களூரு அணி.

அப்படியே விராட் கோலி தான் வேண்டும் என 3 வீரர்களை தக்க வைத்து 40 கோடி செலவு செய்துவிட்டால். மீதம் ஊக்க 40 கோடியை வைத்து ஒரு சிறந்த அணியை உருவாக்க முடியுமா என்பது சந்தேகம் தான். இதனால் பெங்களூரு அணி விராட் கோலியை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அவரை பொது ஏலத்தில் விட்டுவிட்டு பின்னர் ஏல விலை குறைந்தால் எடுக்கலாம் என திட்டமிட்டுள்ளது பெங்களூரு.

விராட் கோலியை பொது ஏலத்தில் விட்டால், மற்ற அணிகள் சும்மா இருக்குமா என்ன?

Editor:

This website uses cookies.