பயப்படாமல் பஞ்சாப்பிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் !!

பயப்படாமல் பஞ்சாப்பிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐ.பி.எல் டி.20 தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரவிசந்திர அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான பஞ்சாப் அணியில் ராஜ்புட் மற்றும் மாயன்க் அகர்வால் ஆகியோருக்கு பதிலாக அக்ஸ்தீப் நத் மற்றும் மோஹித் சர்மா அணியில் இடம்பிடித்துள்ளனர்.

அதே போல் ராஜஸ்தான் அணியில் மஹிபால் லோமர், ஸ்டூவர் பின்னி மற்றும் இஷ் சோதி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;

கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், அக்ஸ்தீப் நத், கருண் நாயர், அக்‌ஷர் பட்டேல், மார்கஸ் ஸ்டோனிஸ், மனோஜ் திவாரி, ரவிசந்திர அஸ்வின், ஆண்ட்ரியூ டை, மோஹித் சர்மா, முஜிபுர் ரஹ்மான்.

இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

ஜாஸ் பட்லர், அஜிக்னியா ரஹானே, சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பின்னி, மஹிபால் லோமோர், ஜோஃப்ரா ஆர்சர், கிருஷ்ணப்பா கவுதம், ஜெயதேவ் உனாட்கட், இஷ் சோதி, அனுரீட் சிங்.

Mohamed:

This website uses cookies.