உங்க கதவ தட்டல… உடைச்சிட்டு உள்ள வர போறான்; இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வாலை புகழ்ந்து பேசிய முன்னாள் கிரேம் ஸ்மித் !!

உங்க கதவ தட்டல… உடைச்சிட்டு உள்ள வர போறான்; இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வாலை புகழ்ந்து பேசிய முன்னாள் கிரேம் ஸ்மித்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் யசஸ்வி ஜெய்ல்வால் மிக விரைவாக இந்திய அணியில் இடம்பிடிப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 15 சீசன்கள் இதுவரை நிறைவடைந்துள்ள நிலையில், 16வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடர் அடுத்த சில தினங்களில் நிறைவடைய உள்ளது. கடந்த தொடர்களை போலவே இந்த தொடரில் இளம் வீரர்கள் பலரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

சென்னை அணியில் பதிரானா, ராஜஸ்தான் அணியில் ஜெய்வால் என ஒவ்வொரு அணியின் வெற்றியிலும் இளம் வீரர்களின் பங்களிப்பே மிக முக்கியமானதாக இருந்து வருகிறது. இதனால் எதிர்கால இந்திய அணி தரமான இளம் வீரர்கள் பலரின் கைகளுக்கு செல்லும் என்ற நம்பிக்கை இந்த தொடரின் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கிடைத்துள்ளது. ஜெய்ல்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு இந்திய அணியில் விரைவாக இடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் எழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில், 13 பந்துகளில் அரைசதம் அடித்து வரலாறு படைத்த யசஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரேம் ஸ்மித், ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம்பிடிப்பதை இனி தடுக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிரேம் ஸ்மித் பேசுகையில், “ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல் அனைத்து உள்ளூர் தொடர்களில் ஜெய்ஸ்வால் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். ஆள் இல்லா திசையை தேர்வு செய்து, அதில் முழு பலத்துடன் அவர் அடிக்கும் சில ஷாட்கள் தனித்துவமிக்கதாக உள்ளது. சுழற்பந்து வீச்சையும் அவர் இலகுவாக கையாண்டு வருகிறார். நிச்சயமாக அவர் மிக விரைவாக இந்திய அணியில் இடம்பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது, ஏனெனில் அவரது பேட்டிங் இந்திய அணியின் கதவை தட்டுவது போன்று இல்லை, கதவை தகர்த்து உள்ளே நுழைவது போன்றே உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் ஏற்கனவே இந்திய அணியில் இருப்பதால், ஜெய்ஸ்வாலையும் எப்படி அணியில் சேர்ப்பது என்பது இனி இந்திய தேர்வாளர்களுக்கு புதிய தலைவலியை கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.