இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணியை சேர்ந்த இந்த வீரர் ஆடுவாரா? மாட்டாரா? என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் துவக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
சென்னையிலிருந்து துபாய் சென்ற சென்னை வீரர்களுக்கு கோரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் இரண்டு வீரர்கள் உட்பட மொத்தம் பதிமூன்று பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தப்பட்டனர்.
பின்னர் நான்கு நாட்கள் இடைவெளியில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனையில், சென்னை அணியை சேர்ந்த எவருக்கும் கொரோனா இல்லை என கண்டறியப்பட்டது. இருப்பினும் மேலும் 5 நாட்கள் தீபக் சஹர் தனிமையில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு நெகட்டிவ் என வந்ததால் வீரர்களுடன் பயிற்சியில் இணைந்தார்.
தீபக் சஹருடன் சேர்ந்து மற்றொரு சென்னை வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் க்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு அவரும் தனிமைப்படுத்துதல் வைக்கப்பட்டிருந்தார். இவருக்கு நடத்தப்பட்ட அடுத்தக்கட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துவிட்டது. இருப்பினும் அணி நிர்வாகம் இவரை மற்ற அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடுவதற்கு தயங்கி வருகிறது. அதனால் மேலும் ஒரு வாரகாலம் தனிமைப்படுத்துதல் வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த வருட ஐபிஎல் தொடரில் இவர் ஆடவைக்கப்படுவாரா?மாட்டாரா? என்கிற சந்தேகம் தொடர்ந்து இருந்து வருகிறது. அணி நிர்வாகத்தின் ஒரு தரப்பு இவர் மும்பை அணிக்கு எதிரான துவக்க போட்டியில் ஆடுவார் என தெரிவித்து இருக்கிறது. ஆனால் மருத்துவர்கள் கூறுகையில், இவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என தெரிவித்து வருகிறது.
தற்போதுவரை எவ்வித அறிவிப்புகளும் இவரைக் குறித்து வராததால், சென்னை அணியில் இனி ஆட மாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.