ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டன்… தரமான வீரர்களுக்கு அணியில் இடம்; ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
சீனாவில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது. இதில் கிரிக்கெட் விளையாட்டும் ஒன்று. ஆசிய விளையாட்டு தொடரில் பங்கேற்கு முடிவு செய்திருந்த பிசிசிஐ., தற்போது இதற்கான அணியையும் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் இந்திய அணியில், ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர்.
விக்கெட் கீப்பர்களாக ஜித்தேஷ் சர்மாவும், பிரப்சிம்ரன் சிங்கும் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களாக சபாஷ் அஹமத், வாசிங்டன் சுந்தர் மற்றும் சிவம் துபே ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் ரவி பிஸ்னோயும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவி ஆகியோரும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி;
ருத்துராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, வாசிங்டன் சுந்தர், சபாஷ் அஹமத், ரவி பிஸ்னோய், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மாவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங்.
ஸ்டாண்ட்பை வீரர்கள்;
யஷ் தாகூர், சாய் கிசோர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, சாய் சுதர்சன்.