போன போட்டியில் 220*, இப்போ 168.. என்னை ஏன்டா எடுக்கல என தேர்வுக்குழுவுக்கு நெத்தியடி கொடுக்கும் ருத்துராஜ் கெய்க்வாட் பேட்டிங்!

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதி போட்டியில் அஸ்ஸாம் அணிக்கு எதிராக 168 ரன்களை குவித்து அசத்தியிருக்கிறார் இளம் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்.

2022 ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடர் தற்போது அரையிறுதி சுற்றில் இருக்கிறது. இன்று நடைபெற்று வரும் முதல் அரை இறுதி போட்டியில் அஸ்ஸாம்-மகாராஷ்டிரா இரு அணிகளும் மோதி வருகின்றன.

டாஸ் இழந்த மகாராஷ்டிரா அணிக்கு முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. குவாட்டர் பைனலில் கலக்கிய கேப்டன் ருத்துராஜ் மற்றும் ராகுல் திரிப்பாதி இருவரும் ஓப்பனிங் செய்தனர்.

ருத்துராஜ் இப்போட்டியிலும் நிதானமாக துவங்கினார். ஆனால் ராகுல் திரிப்பாதி தட்டுத்தடுமாறி மூன்று ரன்கள் எடுத்து அவுட்டாகினர். மூன்றாவது வீரர் பச்சவ் 41 ரன்களுக்கு ஆட்டம் இழந்த பிறகு உள்ளே வந்த அங்கீத் பாவ்னே, ருத்துராஜ் உடன் ஜோடி சேர்ந்து பேட்டிங்கில் கலக்கினார்.

ருத்துராஜ் சதம், பாவனே அரைசதம் அடித்தபின், தனது பேட்டிங்கை அடுத்த கியருக்கு எடுத்துச் சென்றனர். சதம் அடித்த பிறகு ருத்ர தாண்டவத்தை துவங்கினார் ருத்துராஜ் கெய்க்வாட்.

88 பந்துகளில் சதமடித்த ருத்துராஜ், 126 பந்துகளில் 168 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். 18 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடங்கும். இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த பாவ்னே சதமடித்த பின், 89 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் ருத்துராஜ் மற்றும் பாவ்னை இருவரும் மொன்றவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 207 ரன்கள் குவித்து அசத்தினர். அதன்பின்னர் வந்த வீரர்கள் அவசரப்பட்டு சொற்பரன்களுக்கு அவுட்டாக, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்களை எடுத்திருந்தது மகாராஷ்டிரா அணி.

351 ரன்கள் என்கிற இமாலய இலக்கை துரத்தி விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டிக்குள் நுழைவதற்கு அஸ்ஸாம் அணி நிச்சயம் போராடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் கால் இறுதிப் போட்டியில் அந்த அணிக்காக 174 ரன்கள் அடித்து அசத்திய ரியான் பராக், மிகச்சிறந்த பார்மில் இருப்பதால் அந்த அணி நம்பிக்கையுடன் சேஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Mohamed:

This website uses cookies.