சையது முஷ்டாக் அலி போட்டியில் சென்னை அணியின் அதிரடி துவக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 ஐபிஎல் தொடரில் மிக சிறந்த முறையில் செயல்பட்டு அந்த தொடரில் அதிகமான ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னிலை வைத்த சென்னை அணியின் துவக்க வீரர் ருத்ராஜ் கெய்க்கவாட் தனது அபாரமான திறமை இன் மூலம் எதிர்கால இந்திய அணியின் சிறந்த வீரராக திகழ்வார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கா
இதன் காரணமாக நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ள சையது முஷ்டாக் அலி போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருத்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா அணியில் கேதார் ஜாதவ் போன்ற சீனியர் வீரர்கள் இருந்த போதும் ருத்ராஜ் சிறப்பாக செயல் பட்டதன் காரணமாக அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியின் துணை கேப்டனாக நவ்சாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
சையது முஷ்டாக் அலி போட்டியின் மகாராஷ்டிரா அணி வீரர்கள்
ருத்ராஜ் கெய்க்வாட்(c), நவ்ஷாத் ஷேக் (vc), கேதர் ஜாதவ், யாஷ் நகர், அசீம் காசி, ரஞ்சித் நிகம், சத்யஜித் பட்சவ், தரஞ்சித் சிங் தில்லான், முகேஷ் சவுத்ரி, அசை பால்கர், மனோஜ் இங்கிள், பிரதீப் தாதே, சம்சுசமா காஜி, சுவப்னில் பல்பக்கர், திவ்யாங் கிங்கனேகர், சுனில் யாதவ், தன்ரசிங் பர்தேசி, ஸ்வப்னில் குகாலே, பவான் ஷா, ஜகதீஷ் ஜோப்.
2021 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியின் துவக்க வீரர் ருத்ராஜ் 16 போட்டிகளில் பங்கேற்று 635 ரன்கள் அடித்து அதிகமான ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னிலை பெற்று அந்த தொடருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.