இந்த தொடரில் பாண்டியா ஆடினால் தான் இத்தியாவிற்கு வெற்றி – ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்
இந்தியா – தென்னாப்பிரிக்கா தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையம் ஒரு நாட்டு முன்னாள் வீரட்களும் பலவேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இரு அணியை சுற்றிலும் பல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
தென்னாப்பிரிக்க அணியில் திடீரென வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் காயம் ஆகிறார். பின்னர் ஓரளவிற்கு மீண்டு வருகிறார்.
இந்திய அணியின் துவக்க வீரர் சிகர் தவனுக்கு கணுக்காலில் காயம் ஏற்படுகிறது. பின்னர் தற்போது அந்த காயத்தில் இருந்து மீண்டு வந்து முதல் டெஸ்ட் போட்டியில் ஆட தயாராகி உள்ளார்.
திடீரென யாரும் எதிர்பாராத வகையில் ரவீந்திர ஜடேஜா வைரல் காய்ச்சலால் அவதிபடுகிறார். தற்போது அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்டுள்ளார். ஆவர் ஆடுவாரா மாட்டாரா என இன்னும் 48 மணி நேரம் கழித்து தான் தெரியவரும் எனக் கூறிவிட்டனர் மருத்துவ அதிகாரிகள்.
இதனை எல்லாம் தாண்டி இரு அமி வீரர்களும் மிக பலமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்திய அணிக்கென ஒரு தனி மைதானம் ஒதுக்கப்பட்டு அதில் வீரர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக பயிற்சி செய்து வருகின்றனர்.
அந்த காட்சிகள் கீழே :
இதனியெல்லாம் தாண்டி இந்த தொடர் குறித்து சச்சின் டெண்டுல்கர் வாய் திறந்துள்ளார்.
நான் ஆடிய 24 வருட கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு இப்படி ஒரு அணி செட் ஆனது இல்லை. இந்த அணி செம்மையாக செட் ஆகியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில் ஆடுவது சவாலான விஷயம். ஆனால்இந்த அணி அதில் வெற்றி பெறும் என நினைக்கிறேன்.
ஒருவர் மட்டும் ஆடினால் போதாது, மொத்த ஆணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். இந்திய அணி இந்த தொடருக்கு நன்றாக தயாராகி உள்ளது.
இந்த அணியில் சிறப்பம்சம் என்னெவென்றால் அது ஹர்திக் பாண்டியா தான். அவரால் 7 அல்லது 8ல் இறங்கி அற்புதமாக பேட்டிங் செய்து ரன் சேர்க்க முடியும். ஓரி நாளில் 5ஆவது பந்து வீச்சாளராக 17-18 ஓவர்கள் வீச முடியும்.
அதேபோல் அற்புதமான பீல்டர் அவர். இதனால் ஹர்திக் பாண்டியா நன்றாக ஆகிவிட்டால் இனபிஹா தொடரில் இந்திய அணி வெல்ல பெரும் வாய்ப்புகள் உள்ளது.
எனக் கூறினார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
ஹர்திக் பாண்டியா ஆடினால் தான் வெற்றி பெறுமா? சச்சின் சொல்வது சரியா? உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்.