இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் மீண்டும் டீர் தொடரை இழந்ததற்கு பேட்டிங் தான் பிரச்சனை என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக தென்னாப்பிரிக்க மண்ணில் 50ற்கு மேல் சராசரி வைத்திருக்கும் ரகானேவை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் எடுக்கத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விஷயம் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரையும் வியப்படைய வைத்துள்ளது.
ரோகித் சர்மாவை இறக்கியது பெரும் பிரச்சனையை கொடுத்துள்ளது. அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும்.
எனக் கூறினார் சோயப் அக்தர்.
இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் லுன்ஜி நிகிடி 6 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 39 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற நிகிடி அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 6-வது தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.
தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:-
எல்லா விஷயங்களையும் களத்திலேயே விட்டு விட விரும்புகிறேன். தொடரை இழந்து விட்டதால் நான் எடுத்த 153 ரன்கள் என்பதை பெரிதாக கருத முடியாது. நாம் வெற்றி பெற்று இருந்தால் 30 ரன்கள் எடுத்து இருந்தால் கூட பெரிதாக இருந்து இருக்கும். ஒரு அணியாக கூட்டாக வெற்றி பெற விரும்புகிறோம்.
ஆட்டத்தின் முடிவில் ஒரு அணி தோற்று தான் ஆக வேண்டும். எந்த ஒரு அணியும் எப்பொழுதும் வெற்றி பெறவே முயற்சிக்கும். அணியின் தோல்வியை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் நாம் எந்த மாதிரி விளையாடினோம் என்பது முக்கியமானது. எங்களுக்கு சாதகமாக இருந்த நிலையை நழுவவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. எளிதான முறையில் பல விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு நிறைய வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொருவரும் முழு ஆட்ட திறனை வெளிப்படுத்தினோமா? என்பதை தங்களுக்கு தானே கேட்க வேண்டியது அவசியமானதாகும். சில விஷயங்கள் சரியாக அமையாவிட்டால் அணி தேர்வு குறித்து விமர்சனங்கள் கிளம்ப தான் செய்யும். அதனை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
இவ்வாறு விராட்கோலி கூறினார்.