தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கேப்டன் விராத் கோலி, நேற்று கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
செஞ்சுரியனில் நடைபெறும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 335 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாளான நேற்று இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 307 ரன்களில் முடிவுக்கு வந்தது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய கேப்டன் விராத் கோலி 153 ரன்களில் ஆட்டமிழந்தார்.
28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தப்பட்டது. மழைக்குப் பின் ஆட்டம் தொடங்கியபோது, விராத் கோலி நடுவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மைதானம் ஈரமாக இருந்ததால் பந்து ஸ்விங் ஆகவில்லை.
பந்து ஈரமாகவும் இருந்ததால் இதுபற்றி புகார் சொன்னார். அவர்கள் அதற்கு சரியான பதில் சொல்லாததால் இந்த விவகாரத்தை போட்டி நடுவர் கிறிஸ் பிராடிடம் கொண்டு செல்ல சென்றார். அம்பயர்களுடன் நீண்ட நேரம் விவாதித்தும் பலனில்லாததால் விராத் கோலி கோபமடைந்தார். இந்த தகவலை பின்னர் செய்தியாளர்களிடம் பும்ரா தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 92.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி மூன்றாவது நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை மழையால் சிறிதுநேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் தொடங்கியபோது நடுவருடன் வாக்குவாதம் செய்தார் கோலி. மழையால் மைதானம் ஈரத்தன்மை கொண்டதாக இருந்ததால் பந்து அடிக்கடி ஈரமானது. இதனால் அதிருப்திக்குள்ளான கோலி, மைதான நடுவர் மேக்கேல் கஃப்பிடம் வாக்குவாதம் செய்தார். கோலியின் வாதத்தை நடுவர் ஏற்காததால் கோபத்தில் பந்தைத் தூக்கிக் கீழே எறிந்தார் கோலி.
இதையடுத்து, ஐசிசி விதிமுறைகளுக்கு முரணாகச் செயல்பட்டதால் விராட் கோலிக்குப் போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.