முகமது ஷமி தான் தரமான பந்துவீச்சாளர்…இப்ப அவரேஇல்லேனாலும் பிரச்சனை எங்களுக்கு தான்; உண்மையை பேசிய டெம்பா பவுமா !!

முகமது ஷமி தான் தரமான பந்துவீச்சாளர்…இப்ப அவரேஇல்லேனாலும் பிரச்சனை எங்களுக்கு தான்; உண்மையை பேசிய டெம்பா பவுமா

முகமது ஷமி இல்லாவிட்டாலும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி பந்துவீச்சில் பலமான அணியாகவே உள்ளது என தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி.20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்கா அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 26ம் தேதி துவங்க இருக்கும் நிலையில், இந்திய அணி பந்துவீச்சை சமாளிப்பது தென் ஆப்ரிக்கா வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெம்பா பவுமா பேசுகையில், “நாங்கள் எங்களது சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்வது எங்களுக்கு சாதகமான விசயம் தான், ஆனாலும் இந்திய அணியை எதிர்கொள்வது மிக கடினம். இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி, இந்த தொடரில் விளையாடாவிட்டாலும் இந்திய அணி தற்போதும் பந்துவீச்சில் வலுவான அணி தான். முகமது ஷமியின் இடத்தில் இடம்பெற போகும் வீரர் யாராக இருந்தாலும், அவராலும் எங்கள் மீது நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அந்த அளவிற்கு இந்திய அணி பந்துவீச்சில் வலுவான அணியாக உள்ளது. இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வெற்றிக்காக நாங்கள் எங்களால் முடிந்தவரை போராடுவோம்”என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.