நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வருகிற டிசம்பர் 16ஆம் தேதி பங்கேற்க உள்ளது. தென் ஆப்ரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்ட படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
அஜிங்கியா ரஹானே
கடந்த 15 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு சதம் மட்டும் அடித்து மற்ற போட்டிகளில் எல்லாம் படு மோசமாக சொதப்பி வரும் இந்திய அணியின் முன்னாள் துணை கேப்டன் அஜிங்கிய ரஹானே எதிர்வரும் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அஜிங்கியா ரஹானே என்னதான் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆடும் லெவனில் விளையாட மாட்டார் என்றே கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.