துபாய் மைதானத்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கான 18 வது போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான சவுத் ஆப்பிரிக்கா அணியும் கேரன் பொலார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளது. சமபலம் பொருந்திய இரண்டு அணிகளுக்கும் மத்தியில் நடைபெறும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த அணியாக சவுத் ஆப்பிரிக்கா அணி திகழ்ந்தாலும் டி20 தொடரில் சவுத் ஆப்பிரிக்கா அணி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை இருந்தபோதும் இந்த உலக கோப்பை தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று மிகச் சிறந்த 11 வீரர்களை சவுத் ஆப்பிரிக்கா அணி தனது அணியில் இணைத்து விளையாடி வருகிறது இருந்தபோதும் இறுதியாக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சவுத் ஆப்பிரிக்கா அணி தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர் கொள்ளும் சவுத்ஆப்பிரிக்கா அணியின் பிரடிக்சன் 11 பற்றி இங்கு காண்போம்.
சவுத் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்கள்
2021 உலகக் கோப்பை தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு போட்டியில் சவுத்ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரர்கள் குயின்டன் டி காக்(wk) மற்றும் டெம்பா பவுமா(c) ஆகிய வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை, மேலும் அதற்கு பின் களமிறங்கிய ராசி வேண்டர்சன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார் ஆனால் இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார் இதன் காரணமாக இந்த போட்டியிலும் இவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவர்களை தொடர்ந்து சவுத்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் மார்க்ரம், ஹென்ரிஜ் க்ளேசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய பேட்ஸ்மென்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சவுத்ஆப்பிரிக்கா அணியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.