துபாய் மைதானத்தில் நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கான 18 வது போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான சவுத் ஆப்பிரிக்கா அணியும் கேரன் பொலார்ட் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளது. சமபலம் பொருந்திய இரண்டு அணிகளுக்கும் மத்தியில் நடைபெறும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை டி20 தொடரில் இரண்டு முறை கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிற உலக கோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனைவரும் அதிரடி பேட்ஸ்மேன்களாக இருந்தும் கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 55 ரங்களிக் ஆல்அவுட் ஆகி இங்கிலாந்து அணியிடம் பரிதாப தோல்வியைத் தழுவியது. இதனால் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு வெஸ்ட் இண்டீஸ் அணி காத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரடிக்சன் லெவன் குறித்து இங்கு காண்போம்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள்
கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர்கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அந்த அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் தான் அதிகபட்சமாக அந்த அணிக்காக 13 ரன்கள் அடித்திருந்தார் மற்ற அனைவரும் ஒரு இலக்க ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பரிதாபமாக வெளியேறினர். இதன் காரணமாக சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்த போட்டியில் பெரிய மாற்றங்கள் எதுவும் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவன் லெவிஸ், லெண்ட்ல் சைமன்ஸ், கிறிஸ் கெய்ல், சிம்ரன் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன்(wk).