வங்கதேசத்தை ஜெயிச்சுடோம்னு சந்தோசப்படாதிங்க … தவறை சுட்டிக்காட்டி இந்திய அணிக்கு பாடம் எடுத்த முன்னாள் வீரர்..
வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற தவறு இனிமேலும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என இந்திய அணிக்கு சபாக் கரீம் அறிவுரை கொடுத்துள்ளார்.
வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது, இதில் முதல் டெஸ்ட் போட்டியை 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அபார பெற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தடுமாறி வெற்றி பெற்றிருந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கும்.
2வது டெஸ்ட் போட்டியில் தடுமாற்றம்..
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களுடைய விக்கெட்களை இழந்தனர்.டாப் ஆர்டர் , மிடில் ஆர்டர் என எந்த பாட்சாவும் வங்கதேச வீரர்களிடத்தில் எடுபடவில்லை.
அதற்குப் பிறகு எட்டாவது விக்கெட்டில் பார்ட்னர்ஷிப் அமைத்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி அஸ்வின் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதனால் இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.
வங்கதேச அணிக்கு எதிரான இந்த தொடரை வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி இருந்தாலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செயல்பட்ட விதம் பெரும்பாலானவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
இதனால் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி செய்த தவறை சரி செய்து கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணி குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சபாக் கரீம் இந்திய அணிக்கு வங்கதேச தொடர் ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும், இந்திய அணி செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சபாக் கரீம் தெரிவித்ததாவது, “இந்திய அணிக்கு இது ஒரு எச்சரிக்கையாகும், வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்த தவறை சுட்டிக்காட்டுவது மிக முக்கியமானதாகும், நான் அடுத்ததாக பலமாய்ந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளோம். தற்பொழுது நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தகுதி பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே விளையாடுவதாக தெரிகிறது, ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நாம் வெற்றி பெறவும் வேண்டும். செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டாம். இந்திய அணி பேட்ஸ்மேன்கள், ஸ்பின்னர்களின் லென்த் பாலை சமாளிக்க முடியவில்லை, டிபன்ஸ் விளையாடுவது தற்காலிகமாக வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவதற்கு அதிக பயிற்சிகளை செய்ய வேண்டும்” என சபாக் கரீம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது